தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு கூழம்பந்தல் ஜகந்நாதீஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

கங்கை கொண்ட சோழீஸ்வரம்

ஊர் :

கூழம்பந்தல்

வட்டம் :

செய்யாறு

மாவட்டம் :

காஞ்சிபுரம்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

கங்கை கொண்ட சோழீஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

சிவபுரம், சிவன்கூடல், இடையார்பாக்கம் சிவன்கோயில்

சுருக்கம் :

காஞ்சிபுரத்திலிருந்து 18கி.மீ. தொலைவில் வந்தவாசி செல்லும் வழியில் உள்ள கூழம்பந்தல் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. கங்கை கொண்ட சோழன் என்னும் பட்டப்பெயர் கொண்ட முதலாம் இராஜேந்திர சோழனின் ஆன்மீகக் குருவான ஈசான சிவபண்டிதரால் “கங்கை கொண்ட சோழீஸ்வரம்“ என்னும் இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்துள்ள ஊர் கங்கை கொண்ட சோழபுரம் என்றும், இறைவன் பெயர் கங்கை கொண்ட சோழீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. தாங்குதளம் முதல் சிகரம் வரை முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள இக்கற்றளி மூன்று தளங்களை உடைய விமானத்தைக் கொண்டுள்ளது. சதுர வடிவக் கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். தெற்கு வடக்காக நீண்டுள்ள அர்த்த மண்டபத்தில் சோழர்கால உருளைத் தூண்கள் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தினைத் தொடர்ந்து முகமண்டபம் அமைந்துள்ளது. கருவறை விமானத்தின் வெளிப்புறச் சுற்றின் சுவர்களில் அமைந்துள்ள தேவகோட்டங்களில் இறைவடிவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்து கலைப்பாணியை பறைசாற்றுகின்றன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் மரபுச் சின்னமாக விளங்குகிறது. நித்திய பூஜைகள் கோயில் அர்ச்சகர்களால் நடத்தப் பெறுகின்றன. பிரதோஷம், சனிப்பிரதோஷம், மகாசிவராத்திரி முதலிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜேந்திர சோழன்

கல்வெட்டு / செப்பேடு :

இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கைகளிலும், கல்வெட்டுத் தொகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மன் அமைக்கப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். சோழர்கால உருளைத் தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. வேசரபாணியில் அமைந்துள்ளது. மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கருவறை திருமுன்னில் சோழர்கால வாயிற்காவலர்கள் காட்டப்பட்டுள்ளனர். இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார்.

அமைவிடம் :

அருள்மிகு கங்கை கொண்ட சோழீஸ்வரம், கூழம்பந்தல்-604 408, காஞ்சிபுரம்

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

சென்னையிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லலாம். செங்கல்பட்டு இரயில் நிலையத்திலிருந்தும் காஞ்சிபுரம் செல்லலாம். அங்கிருந்து 18கி.மீ. பேருந்தில் வந்தவாசி வழியாக கூழம்பந்தல் செல்லலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

வந்தவாசி, கூழம்பந்தல்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

காஞ்சிபுரம் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:29(இந்திய நேரம்)