தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு கைலாசமுடையார் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

அரிகுல ஈஸ்வரமுடையார் கோயில்

ஊர் :

உலகாபுரம்

வட்டம் :

வானூர்

மாவட்டம் :

விழுப்புரம்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

ஸ்ரீகைலாசமுடையார்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

பெருமுக்கல், உலகாபுரம் விஷ்ணு கோயில்

சுருக்கம் :

சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து உப்புவேலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் வானூர் வட்டத்தில் உலகாபுரம் அமைந்துள்ளது. இச்சிவன் கோயில் “கைலாசமுடையார் கோயில் என்றும், “அரிகுல ஈஸ்வரமுடையார் கோயில் என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. முதலாம் இராஜராஜனுடைய 3-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டொன்று அம்பலவன் கண்டராதித்தன் என்பவன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகிறது. பிற்காலச் சோழர் காலத்தில் இவ்வூர் ஒய்மா நாட்டின் ஒரு பிரிவான பேரையூர் நாட்டில் அடங்கி இருந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஒய்மா நாட்டுத் தனியூரான உலோகமாதேவிபுரம் ஸ்ரீகைலாயத்து பரமசுவாமிகள் என இறைவன் வழங்கப்பட்டுள்ளார். கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மன் அமைக்கப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். சோழர்கால உருளைத்தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. விமானம் தளப்பகுதி தற்போது சுதையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை திருமுன்னில் சோழர்கால வாயிற்காவலர்கள் காட்டப்பட்டுள்ளனர். இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். தாங்குதளத்தில் இராமாயண புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜ சோழன்

கல்வெட்டு / செப்பேடு :

கல்வெட்டுகள் உள்ளன.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மேற்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மன் அமைக்கப் பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். சோழர்கால உருளைத்தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன. சூரியன், பிரம்மசாஸ்தா (முருகன்), காளி, பைரவர் ஆகிய சிற்பங்கள் வழிபாட்டில் இல்லாத சிற்பங்களாக சிதறிக் கிடக்கின்றன.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. விமானம் தளப்பகுதி தற்போது சுதையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை திருமுன்னில் சோழர்கால வாயிற்காவலர்கள் காட்டப்பட்டுள்ளனர். இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். தாங்குதளத்தில் இராமாயண புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

அமைவிடம் :

கைலாசமுடையார் கோயில், உலகாபுரம்-604 154, விழுப்புரம்

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து உப்புவேலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் வானூர் வட்டத்தில் உலகாபுரம் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

திண்டிவனம், பெருமுக்கல்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

திண்டிவனம், விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

திண்டிவனம் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:26(இந்திய நேரம்)