தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு திருப்பாலீசுவரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

அமிர்தேஸ்வரர்

ஊர் :

திருப்பாலைவனம்

வட்டம் :

திருவள்ளுர்

மாவட்டம் :

திருவள்ளுர்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

திருப்பாலீஸ்வர சுவாமி

உலாப் படிமம் பெயர் :

சோமாஸ்கந்தர்

தாயார் / அம்மன் பெயர் :

லோகாம்பிகா தேவி

தலமரம் :

ஆலமரம்

திருக்குளம் / ஆறு :

அமிர்தபஷ்கரணி தீர்த்தம்

ஆகமம் :

காரண ஆகமம்

பூசைக்காலம் :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

திருவிழாக்கள் :

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தலவரலாறு :

தேவர்கள் பாற்கடலில் பெற்ற அமுதத்தை அருந்துவதற்கு முன்னர் அமிர்தத்தால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் இதுவாகும். 'அமிர்தேசுவரர்' என்றும் பெயரிட்டு அழைத்து வணங்கினர். தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை அமுதம் வேண்டிக் கடையத் தொடங்கிய நாள் அமாவாசை. ஆலகாலவிடம் வெளிப்பட்ட நாள் அமாவாசைக்குப் பத்தாம் நாளாகிய தசமி திதி. அமுதம் கிடைக்கப் பெற்ற நாள் பதினோராம் நாளாகிய ஏகாதசி. அசுர்களைப் புறக்கணித்துத் தாங்கள் மட்டும் அமுத்தை உண்ணுதற்கு மறைவான இடம் தேடி தேவர்கள் அலைந்த நாள் பன்னிரெண்டாம் நாளாகிய த்வாதசி நாளாகும். அவர்கள் அமுத்தை உண்ணுவதற்குத் தேர்ந்தெடுத்த மறைவான இடம் இன்றைய திருப்பாலைவனம் பகுதியாகும். இறைவனை பூசித்த நாள் திரயோதசி அதாவதுசோழ மன்னன் ஒருவன் தனது பெரும்படையுடன் வடபுலம் சென்று வெற்றிக்கொடி நாட்டி திரும்பியபோது பாலைமரங்கள் நிறைந்துள்ள இப்பகுதியில் தங்கி ஓய்வெடுத்தான். அதுசமயம் ஒரு பாலைமரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக மன்னனுக்குத் தோன்றவே அவன் அம்மரத்தை வெட்டப் பணித்தான். கோடாரி வெட்டிய இடத்திலிருந்து குருதி வெளிப்பட்டது. உடனே அரசன் அம்மரத்தை வெட்டுவதை நிறுத்தி அகழ்ந்து பார்த்தான். அப்போது தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இலிங்க வடிவில் இருந்த இறைவனின் தலை மீது கோடாரி பட்ட இடத்தில் குருதி வெளிப்பட்டதையுணர்ந்து, மனம் பதைத்தும், பரவசம் கொண்டும் ஆனந்தமடைந்தான். உடன் ஒரு கோவிலையும் எழுப்பி ஆராதனைகள் செய்ய ஆணையிட்டான். அன்று அம்மன்னனால் எழுப்பப்பட்ட கோயிலே தூங்கானை மாடமாக அமைந்த திருப்பாலீசப் பெருமான் கருவறைக் கோயிலாகும். கோடாரியால் வெட்டப்பட்ட தழும்பு இன்றும் இலிங்கத்தில் காணப்படுகின்றது.

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

வாசீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்

சுருக்கம் :

பாலை மரங்கள் நிறைந்த காடாக (வனமாக) ஒரு காலத்தில் இருந்ததால், 'பாலைவனம்' என்று அழைக்கப்பட்டது. இங்கு இத்திருத்தலம் அமைந்துள்ளதால் இவ்வூர் ' திருப்பாலைவனம்' எனப் பெயர் பெற்றது.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜேந்திர சோழன்

கல்வெட்டு / செப்பேடு :

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

கோயிலின் அமைப்பு :

அமைவிடம் :

அருள்மிகு உலகாம்பிகை உடனாய திருப்பாலீசுவரர் திருக்கோயில், திருப்பாலைவனம். திருவள்ளூர் மாவட்டம் பின் - 601 205.

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 7.00-12.00 முதல் மாலை 4.30-8.30 வரை

செல்லும் வழி :

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலிருந்து 10 km தொலைவிலும், பழவர்காட்டிலிருந்து 8 km தொலைவிலும், மீஞ்சூரிலிருந்து 16 km தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது. சென்னை செங்குன்றம் (Redhills) பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி வழியாக பழவேற்காடு செல்லும் அனைத்து பேருந்துகளும் இத்தலத்தின் அருகில் நின்று செல்லும். மீஞ்சூர் மற்றும் பொன்னேரியிலிருந்து நிறைய பேருந்துகள் செல்கின்றன.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலிருந்து 10 km தொலைவிலும், பழவர்காட்டிலிருந்து 8 km தொலைவிலும், மீஞ்சூரிலிருந்து 16 km தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது. சென்னை செங்குன்றம் (Redhills) பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி வழியாக பழவேற்காடு செல்லும் அனைத்து பேருந்துகளும் இத்தலத்தின் அருகில் நின்று செல்லும். மீஞ்சூர் மற்றும் பொன்னேரியிலிருந்து நிறைய பேருந்துகள் செல்கின்றன.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

பொன்னேரி, தச்சூர் கூட்டுச்சாலை

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

திருவள்ளுர்

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

திருவள்ளுர் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:56(இந்திய நேரம்)