தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

ஞாயிறு கோயில்

ஊர் :

ஞாயிறு

வட்டம் :

பொன்னேரி

மாவட்டம் :

திருவள்ளுர்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

புஷ்பரதேஸ்வரர் (பூத்தேர் ஆண்டார்)

உலாப் படிமம் பெயர் :

சோமாஸ்கந்தர்

தாயார் / அம்மன் பெயர் :

சொர்ணாம்பிகை (கருணாம்பிகை)

தலமரம் :

திருவோடு மரம், நாகலிங்க மரம், செந்தாமரை

திருக்குளம் / ஆறு :

சூரிய தீர்த்தம், சிம்ம தீர்த்தம்

ஆகமம் :

சிவாகமம்

பூசைக்காலம் :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

திருவிழாக்கள் :

தமிழ்ப் புத்தாண்டு, சூரிய பூஜை, ரத சப்தமி, சங்கராந்தி, நவராத்திரி

தலவரலாறு :

காசியப மகரிஷியின் புதல்வரான சூரிய பகவான் எமதர்மனின் மகளான சமுக்னா தேவியை மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி (சாயா தேவி) கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த புதல்வர் தான் சனி பகவான். எமன் மூலமாக சமுக்ஞா தேவி பிரிந்து சென்றதை அறிந்த சூரிய பகவான், மனைவியை அழைத்து வரக் கிளம்பினார். அப்போது அவர் திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்து வரும் வேளையில், வானத்தில் ஒரு ஜோதி தோன்றியது. அதை பின் தொடர்ந்து சென்ற சூரியர், அது இங்குள்ள தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலருக்குள் ஐக்கியமானதை கண்டார். ஜோதியின் நடுவில் தோன்றிய சிவன், அவரது உக்கிரத்தை குறைத்து, மனைவியுடன் சேர்ந்து வாழ அருளினார். சூரிய பகவான் விரும்பியவாறு இங்கேயே புஷ்பரதேஸ்வரர் என்ற திருப்பெயரில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். 

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

தேவி கருமாரியம்மன் கோயில், வாசீஸ்வரர் கோயில், ஒத்தாண்டேஸ்வரர் கோயில், ஊன்றீஸ்வரர் கோயில்

சுருக்கம் :

கன்வ மகரிஷி முக்தி அடைந்த திருத்தலம். சுந்தரர் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்து கொண்டார். இவருக்கும் இங்கு சன்னதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. ஊரின் பெயர் ஞாயிறு என்பதால் சூரிய வழிபாடு இங்கு சிறப்புடையதாக கருதப்படுகிறது. சித்திரை மாதம் முதல் வாரம் (1-7ம் தேதி), காலை 6:10 மணிக்கு சிவன் மற்றும் அம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. இத்திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய ஓரை சமயத்தில் (காலை 6-7, மதியம் 1-2, மாலை 6-7) வழிபாடு செய்வோர்க்கு ஜென்ம பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கையாக விளங்குகிறது. கண் சம்பந்தப் பட்ட நோய்கள் நிவர்த்திக்கு பிரார்த்தனை ஸ்தலம். இக்கோவிலில் நவக்கிரக சந்நிதி கிடையாது. கண் தொடர்பான நோய்கள் உடையவர்கள், குடும்ப ஒற்றுமை வேண்டுபவர்கள், இத்தலத்து இறைவனை வேண்டி கொள்ளலாம். பஞ்ச பாஸ்கர ஸ்தலம் எனப்படும் 5 சூரியத் தலங்களுள் ஒன்று இந்த ஞாயிறு. மற்றவை திருச்சிறுகுடி, திருமங்கலக்குடி, திருப்பரிதி நியமம், தலைஞாயிறு ஆகியவைகளாகும். கருவறையின் பின்புறச் சுற்றுச் சுவரில் காணப்படும் துர்க்கை, பிரம்மா, இலிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி போன்ற சிற்பங்கள் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தவை. அலங்கார மண்டப வாயிலின் வலதுபுறம் காணப்படும் கண்வ மகரிஷியின் சிற்பம் பிற்காலத்தாயினும் கலையழகு மிக்கதாகும். சோழர் காலந்தொட்டு விஜயநகர காலம் முடிய தோற்றுவிக்கபட்ட 14 செப்புத்திருமேனிகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இவற்றுள் பிரதோஷமூர்த்தியின் செப்புருவம் கண்கவர் சோழர் கால கலைப்படைப்பாகும்.கன்வ மகரிஷி முக்தி அடைந்த திருத்தலம். சுந்தரர் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்து கொண்டார். இவருக்கும் இங்கு சன்னதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. ஊரின் பெயர் ஞாயிறு என்பதால் சூரிய வழிபாடு இங்கு சிறப்புடையதாக கருதப்படுகிறது. சித்திரை மாதம் முதல் வாரம் (1-7ம் தேதி), காலை 6:10 மணிக்கு சிவன் மற்றும் அம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. இத்திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய ஓரை சமயத்தில் (காலை 6-7, மதியம் 1-2, மாலை 6-7) வழிபாடு செய்வோர்க்கு ஜென்ம பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கையாக விளங்குகிறது. கண் சம்பந்தப் பட்ட நோய்கள் நிவர்த்திக்கு பிரார்த்தனை ஸ்தலம். இக்கோவிலில் நவக்கிரக சந்நிதி கிடையாது. கண் தொடர்பான நோய்கள் உடையவர்கள், குடும்ப ஒற்றுமை வேண்டுபவர்கள், இத்தலத்து இறைவனை வேண்டி கொள்ளலாம். பஞ்ச பாஸ்கர ஸ்தலம் எனப்படும் 5 சூரியத் தலங்களுள் ஒன்று இந்த ஞாயிறு. மற்றவை திருச்சிறுகுடி, திருமங்கலக்குடி, திருப்பரிதி நியமம், தலைஞாயிறு ஆகியவைகளாகும். கருவறையின் பின்புறச் சுற்றுச் சுவரில் காணப்படும் துர்க்கை, பிரம்மா, இலிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி போன்ற சிற்பங்கள் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தவை. அலங்கார மண்டப வாயிலின் வலதுபுறம் காணப்படும் கண்வ மகரிஷியின் சிற்பம் பிற்காலத்தாயினும் கலையழகு மிக்கதாகும். சோழர் காலந்தொட்டு விஜயநகர காலம் முடிய தோற்றுவிக்கபட்ட 14 செப்புத்திருமேனிகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இவற்றுள் பிரதோஷமூர்த்தியின் செப்புருவம் கண்கவர் சோழர் கால கலைப்படைப்பாகும்.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.11-15-ஆம் நூற்றாண்டு / பிற்காலப் பாண்டியர் விஜயநகர, நாயக்கர்

கல்வெட்டு / செப்பேடு :

புஷ்பரதேஸ்வரர் கோயிலில் பாண்டியர் காலக் கல்வெட்டு ஒன்றும், விஜயநகர காலக் கல்வெட்டுகள் இரண்டும் காணப்படுகின்றன. பாண்டியர் காலக் கல்வெட்டு ஜடாவர்மன் திரிபுவன சக்கரவர்த்திகள் சுந்தர பாண்டிய தேவனின் 14-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும். மிகவும் சிதைந்துள்ளதால் கல்வெட்டு கூறும் செய்தியினைத் தெளிவாக அறிய இயலவில்லை. ஈழத்திலிருந்து திறை வசூலித்த விஜயநகர மன்னன் வீரபிரதாப தேவராயரின் கல்வெட்டில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து புழல் கோட்டத்து ஞாயிற்று நாட்டை சேர்ந்த ஞாயிறு என்று அழைக்கப்படுகிறார். புஷ்பரதேஸ்வரர் பூத்தேர் ஆண்டார் என்று குறிப்பிடப்படுகிறார். கி.பி.1526-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட விஜயநகர மன்னன் வீரபிரதாப அச்சுதய்ய தேவமகாராயர் காலக் கல்வெட்டு பூத்தேர் விளாகம் என்னும் கிராமத்தினை இக்கோயிலுக்குக் கொடையாக அளித்த செய்தியைக் கூறுகிறது. இக்கொடையை அளித்தவன் கந்தனவோலு என்னும் ஊரினைச் சேர்ந்த பொன்னப்ப நாயக்கர் மகன் நாகம நாயக்கர் என்பவராவார். இக்கல்வெட்டில் காணப்பெறும் கந்தனவோலு என்னும் ஊர் தற்போது ஆந்திரப்பிரதேசத்திலுள்ள கர்னூலைக் குறிக்கும்.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

திருச்சுற்றில் கமல விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமணியர், காலபைரவர், விசாலாட்சி உடனாய விசுவநாதர், சங்கிலி நாச்சியார் ஆகிய சிற்பங்கள் தனித்தனி திருமுன்களில் அமைந்துள்ளன. கருவறைக் கோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், நான்முகன் ஆகிய இறையுருவங்களும், அர்த்தமண்டப வெளிப்புறக் கோட்டங்களில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் உள்ளனர். கருவறையின் பின்புறச் சுற்றுச் சுவரில் காணப்படும் துர்க்கை, பிரம்மா, இலிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி போன்ற சிற்பங்கள் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தவை. அலங்கார மண்டப வாயிலின் வலதுபுறம் காணப்படும் கண்வ மகரிஷியின் சிற்பம் பிற்காலத்தாயினும் கலையழகு மிக்கதாகும். சோழர் காலந்தொட்டு விஜயநகர காலம் முடிய தோற்றுவிக்கபட்ட 14 செப்புத்திருமேனிகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இவற்றுள் பிரதோஷமூர்த்தியின் செப்புருவம் கண்கவர் சோழர் கால கலைப்படைப்பாகும். பரிவாரக் கோயிலில் உள்ள முற்கால சோழர் காலத்தைச் சேர்ந்த சண்டிகேஸ்வரர் சிற்பமும், சொர்ணாம்பிகை கோயிலிலுள்ள விஜயநகர காலத்தைச் சேர்ந்த சங்கிலி நாச்சியார் சிற்பமும் குறிப்பிடத்தக்கவை. சிற்பத்தில் சங்கிலி நாச்சியார் இடது கையில் பூக்கூடையைத் தாங்கி,கூப்பிய கரங்களுடன் காணப்படுகிறார்.திருச்சுற்றில் கமல விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமணியர், காலபைரவர், விசாலாட்சி உடனாய விசுவநாதர், சங்கிலி நாச்சியார் ஆகிய சிற்பங்கள் தனித்தனி திருமுன்களில் அமைந்துள்ளன. கருவறைக் கோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், நான்முகன் ஆகிய இறையுருவங்களும், அர்த்தமண்டப வெளிப்புறக் கோட்டங்களில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் உள்ளனர். கருவறையின் பின்புறச் சுற்றுச் சுவரில் காணப்படும் துர்க்கை, பிரம்மா, இலிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி போன்ற சிற்பங்கள் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தவை. அலங்கார மண்டப வாயிலின் வலதுபுறம் காணப்படும் கண்வ மகரிஷியின் சிற்பம் பிற்காலத்தாயினும் கலையழகு மிக்கதாகும். சோழர் காலந்தொட்டு விஜயநகர காலம் முடிய தோற்றுவிக்கபட்ட 14 செப்புத்திருமேனிகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இவற்றுள் பிரதோஷமூர்த்தியின் செப்புருவம் கண்கவர் சோழர் கால கலைப்படைப்பாகும். பரிவாரக் கோயிலில் உள்ள முற்கால சோழர் காலத்தைச் சேர்ந்த சண்டிகேஸ்வரர் சிற்பமும், சொர்ணாம்பிகை கோயிலிலுள்ள விஜயநகர காலத்தைச் சேர்ந்த சங்கிலி நாச்சியார் சிற்பமும் குறிப்பிடத்தக்கவை. சிற்பத்தில் சங்கிலி நாச்சியார் இடது கையில் பூக்கூடையைத் தாங்கி,கூப்பிய கரங்களுடன் காணப்படுகிறார்.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் கருவறை கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், அதன் மேல் அமைந்துள்ள தளப்பகுதி தற்காலத்தில் அமைக்கப்பட்ட சுதையாலான பகுதியாகவும் காட்சியளிக்கின்றது. கருவறை விமானத்தின் தாங்குதளம் உபானம், ஜகதி, முப்பட்டைக் குமுதம், கம்பு, பட்டிகை ஆகிய உறுப்புகளைப் பெற்று விளங்குகின்றது. திராவிட பாணியில் இக்கோயில் விமானம் அமைந்துள்ளது. மூன்று தளங்களை உடையதாக விளங்குகிறது. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறை சதுர வடிவில் உள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் தூண்களுக்கிடையிலான கோட்டங்களில் கோட்டங்களில் தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் இலிங்கோத்பவர், வடக்கில் நான்முகன் ஆகிய இறையுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டப கோட்டத்தின் வெளிப்புறச் சுவர்களில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் உள்ளனர். தூண்களுடன் கூடிய நீண்ட மகாமண்டபம் விளங்குகின்றது. தெற்கு நோக்கி ஒரு நுழைவாயில் கருவறைக்கு செல்ல அமைந்துள்ளது. தென்புற நுழைவாயிலைத் தொடர்ந்து கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன வரிசையாக முதற்சுற்றில் அமைந்துள்ளன. முதற்சுற்று அகன்ற பரப்பினை உடையதாக காட்சியளிக்கிறது. முதற் திருச்சுற்றில் தென்மேற்கில் அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. அம்மன் கருவறை விமானம் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள அம்மன் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றைப் பெற்று விளங்குகின்றது. இவ்வமைப்புகள் அனைத்தும் காலத்தால் மிகவும் பிற்பட்டவையே. கிழக்குத் திசையில் இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடைதாய் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.இக்கோயில் கருவறை கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், அதன் மேல் அமைந்துள்ள தளப்பகுதி தற்காலத்தில் அமைக்கப்பட்ட சுதையாலான பகுதியாகவும் காட்சியளிக்கின்றது. கருவறை விமானத்தின் தாங்குதளம் உபானம், ஜகதி, முப்பட்டைக் குமுதம், கம்பு, பட்டிகை ஆகிய உறுப்புகளைப் பெற்று விளங்குகின்றது. திராவிட பாணியில் இக்கோயில் விமானம் அமைந்துள்ளது. மூன்று தளங்களை உடையதாக விளங்குகிறது. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறை சதுர வடிவில் உள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் தூண்களுக்கிடையிலான கோட்டங்களில் கோட்டங்களில் தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் இலிங்கோத்பவர், வடக்கில் நான்முகன் ஆகிய இறையுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டப கோட்டத்தின் வெளிப்புறச் சுவர்களில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் உள்ளனர். தூண்களுடன் கூடிய நீண்ட மகாமண்டபம் விளங்குகின்றது. தெற்கு நோக்கி ஒரு நுழைவாயில் கருவறைக்கு செல்ல அமைந்துள்ளது. தென்புற நுழைவாயிலைத் தொடர்ந்து கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன வரிசையாக முதற்சுற்றில் அமைந்துள்ளன. முதற்சுற்று அகன்ற பரப்பினை உடையதாக காட்சியளிக்கிறது. முதற் திருச்சுற்றில் தென்மேற்கில் அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. அம்மன் கருவறை விமானம் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள அம்மன் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றைப் பெற்று விளங்குகின்றது. இவ்வமைப்புகள் அனைத்தும் காலத்தால் மிகவும் பிற்பட்டவையே. கிழக்குத் திசையில் இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடைதாய் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

அமைவிடம் :

அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு-600 067, சோழாவரம் வழி, திருவள்ளுர் மாவட்டம்

தொலைபேசி :

044-29021016, 99620 34729, 94448 71973

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 7.30-11.00 முதல் மாலை 4.30-7.30 வரை

செல்லும் வழி :

சென்னை சென்குன்றத்திலிருந்து (Redhills), 20 கி.மீ. தொலைவில் உள்ளது.  சென்குன்றத்திலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  Toll Plaza விலிருந்து 1.5 கி மீ சென்றவுடன், வலது பக்கம் திரும்பி, காரனோடையில்,   சோழாவரம் பாதையில் சென்று, அருமந்தை என்னும் இடத்தில் இடது புறம் 4 கி மீ   சென்றால் கோவிலை அடையலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

அருமந்தை, காரனோடை, சோழாவரம்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

திருவள்ளுர்

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

திருவள்ளுர் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:56(இந்திய நேரம்)