தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு வரிச்சியூர் உதயகிரீஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

உதயகிரீஸ்வரர் கோயில்

ஊர் :

வரிச்சியூர்

வட்டம் :

மதுரை வடக்கு

மாவட்டம் :

மதுரை

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

உதயகிரீஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

வரிச்சியூர் அஸ்தகிரீஸ்வரர் கோயில், நீலகண்டேஸ்வரர் கோயில், தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு, கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சப்தமாதர்கள் சிற்பங்கள்

சுருக்கம் :

வரிச்சியூர் மலையின் கிழக்குச் சரிவில் ஒரு குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. சிறிய கருவறை கொண்டுள்ள இச்சிவன் கோயில் எளிமையான அமைப்புடையது. இது முற்காலப் பாண்டியர் காலக் குடைவரைக்குச் சான்றாக விளங்குகிறது. உட்புறம் சிவலிங்கம் மட்டும் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் இறைவன் உதயகிரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். முகமண்டபத்தில் வலதுபுறம் கைகட்டிய நிலையில் அடியவர் ஒருவர் நின்ற நிலையிலும், இடதுபுறம் வாயிற்காவலர் ஒருவரும் உள்ளனர். முகப்பில் நந்தி அமைந்துள்ளது.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்

கல்வெட்டு / செப்பேடு :

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். முகமண்டபத்தில் வலதுபுறம் கைகட்டிய நிலையில் அடியவர் ஒருவர் நின்ற நிலையிலும், இடதுபுறம் வாயிற்காவலர் ஒருவரும் உள்ளனர். முகப்பில் நந்தி அமைந்துள்ளது.

கோயிலின் அமைப்பு :

ஒரு சிறிய கருவறை மற்றும் ஒரு சிறிய முகமண்டபம் மட்டும் கொண்டுள்ளது. எளிமையான அமைப்புடையது. கிழக்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் உதயகிரீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. உட்புறம் சிவலிங்கம் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அமைவிடம் :

உதயகிரீஸ்வரர் கோயில், குன்றத்தூர், வரிச்சியூர்-625 020, மதுரை

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

வரிச்சியூர் மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் மதுரை (வடக்கு) வட்டத்தில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வரிச்சியூர் செல்லலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

வரிச்சியூர்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம் :

மதுரை

தங்கும் வசதி :

மதுரை, மேலூர் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:33(இந்திய நேரம்)