தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு வளத்தி ஆதிநாதர் ஜினாலயம்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

ஆதிநாதர், ஆதிபகவான்

ஊர் :

வளத்தி

வட்டம் :

மேல்மலையனூர்

மாவட்டம் :

விழுப்புரம்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சமணம்-தீர்த்தங்கரர்

மூலவர் பெயர் :

ஆதிநாதர்

உலாப் படிமம் பெயர் :

ரிஷப தீர்த்தங்கரர், பார்ச்சுவதீர்த்தங்கரர், சர்வாணயக்‌ஷர்

தாயார் / அம்மன் பெயர் :

தர்மதேவி, பத்மாவதி

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

அட்சய திரிதியை, மகாவீரர் ஜெயந்தி, வசந்த பஞ்சமி, கார்த்திகை தீபம், ஜினராத்திரி, தீபாவளி

தலவரலாறு :

தலபுராணம் இல்லை.

பாதுகாக்கும் நிறுவனம் :

சமண மடாலயத்தின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

வளத்தி காளிகாம்பாள் கோயில், வளத்தி கிருஷ்ணர் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், மேல்சித்தாமூர் சமண மடம், செஞ்சிக் கோட்டை, சீயமங்கலம் பல்லவகுடைவரைக் கோயில், திருமால்பாடி கோயில்

சுருக்கம் :

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜினாலயம் என்றழைக்கப்படும் சமணக் கோயில்களில் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் குறிப்பிடத்தக்கது. செஞ்சி சேத்துப்பட்டு துக்கிடியில் உள்ள சைனக் கிராமங்களுள் ஒன்று வளத்தி ஆகும். இந்த கோயிலில் இருக்கும் கடவுளான ஆதிநாதர் சமணத் தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் முதலாம் தீர்த்தங்கரர் ஆவார். ஸ்ரீ ஆதிநாதர் திகம்பரர் சமணக் கோயில் மேலும் நைனார் கோயில் எனவும் அறியப்படுகிறது. வளத்தி சமணக்கோயிலில் உபவாசம் சிறப்பாக பின்பற்றப்படுகிறது. பெண்கள் உபவாசத்தை மேற்கொண்டு தீர்த்தங்கரர்களின் பெயர்களை ஐந்து முறை கூறிவிட்டு பின் உணவு உட்கொள்கின்றனரர். பௌர்ணமி மற்றும் சதுர்த்தசி, அஷ்டமி ஆகிய நாட்களில் உண்ணாவிரதம் மற்றும் மதச்சடங்குகளை மேற்கொள்கின்றனர்.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.12-13ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு / செப்பேடு :

பழமையான கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

வளத்தி மலை நல்ஞானக்குன்று அல்லது நெடுஞ்சாங்குன்று என்றழைக்கப்படுகிறது. இக்குன்றின் இயற்கையாக அமைந்த குகைத்தளம் காணப்படுகிறது. இக்குகையில் பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.பார்சுவநாதர் நின்ற கோலத்தில் தாமரை மலரில் கால்கள் பதிந்தவாறு உள்ளது மற்றும் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையிலுள்ளது. வளத்தி ஜினாலயம் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முக மண்டபம், இருபது கால் மண்டபம், கலசார்ச்சன மண்டபம், கோபுரம், மானஸ்தம்பம், மடப்பள்ளி ஆகிய பகுதிகளைக் கொண்டு  விளங்குகின்றது. கருவறையில் மூலவர் ஆதிநாதர் கற்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார். இக்கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. கோபுரம் மூன்று நிலைகளை உடையதாக உள்ளது. கோபுரத்தின் தளப்பகுதியில் வாயிற்காவலர்களின் சுதையுருவங்கள் காட்டப்பட்டுள்ளன. கோபுரத்தைக் கடந்து பலிபீடம், மானஸ்தபம் ஆகியவை அமைந்துள்ளன. கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரைப் பகுதி வரை கற்றளியாகவும், அதற்கு மேல் அமைந்துள்ள தளப்பகுதி சுதையாலும் அமைந்துள்ளது. விமானம் திராவிடபாணியில் ஏகதளத்தைப் பெற்றுள்ளது. மண்பங்கள் தூண்களைப் பெற்று விளங்குகின்றன.

கோயிலின் அமைப்பு :

கருவறையில் ஆதிநாதர் சிற்பம் உள்ளது. வளத்தி மலைக் குகையில் பார்சுவநாதர் நின்ற நிலை புடைப்புச் சிற்பம் காணப்படுகின்றது. தீர்த்தங்கரர்களின் செப்புத் திருமேனிகள் உலாப்படிமங்களாக உள்ளன. அவற்றுள், ஆதிநாதர், பார்சுவநாதர், தர்மதேவி, பத்மாவதி ஆகிய செப்புத்திருமேனிகள் குறிப்பிடத்தக்கவை. கோயிலின் ரிஷப தீர்த்தங்கரர், பார்ச்சுவதீர்த்தங்கரர், சர்வாணயக்‌ஷர் ஆகிய மூன்று சிலைகளையும் விழாக்காலங்களில் வீதி உலா எழுந்தருளச் செய்வர். கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியில் பழமையான ஆதிநாதர், தர்மதேவி, பத்மாவதி, பிரம்ம சாஸ்தா கற்சிலைகள் இருக்கின்றன. 

அமைவிடம் :

ஸ்ரீ1008 ஆதிபகவான் ஜினாலயம், வளத்தி, விழுப்புரம்-604 204.

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.00-12.30 முதல் மாலை 4.30-8.30 வரை

செல்லும் வழி :

செஞ்சிக்கு வடக்கே சுமார் 10கிலோமீட்டர் தொலைவில் செஞ்சி வந்தவாசி நெடுஞ்சாலையில் வளத்தி கிராமம் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

வளத்தி, செஞ்சி

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

வந்தவாசி, விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

விழுப்புரம் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:57(இந்திய நேரம்)