தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு விளக்கொளிப் பெருமாள் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

விளக்கொளிப் பெருமாள், தீபப் பிரகாசர், திவ்யப் பிரகாசர்

ஊர் :

தூப்புல்

வட்டம் :

காஞ்சிபுரம்

மாவட்டம் :

காஞ்சிபுரம்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

வைணவம்-பெருமாள்

மூலவர் பெயர் :

விளக்கொளிப் பெருமாள்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

மரகதவல்லி நாச்சியார்

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

சரஸ்வதி தீர்த்தம்

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

வைகாசி மாதம் காஞ்சி வரதராஜப்பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளி வேதாந்த தேசிகனுக்கு காட்சி கொடுக்கும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் விளக்கொளி பெருமாள் வேதாந்தர் திருமுன் செல்வதும், மார்கழி மற்றும் சித்திரைப் பௌர்ணமிகளில் வரதராஜப் பெருமாள் எழுந்தருளி தேசிகனுக்கு மரியாதை செய்வதும் விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

தலவரலாறு :

படைப்புக் கடவுள் நான்முகன் பூவுலகில் தனக்கு கோயில் எதுவும் இல்லை என சிவனிடம் வேண்டி பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். அந்த வேள்விக்கு அவர் தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை. அதனால் கோபங்கொண்ட சரஸ்வதி தேவி நான்முகன் நடத்தும் வேள்வி ஒளியில்லாமல் இருண்டு போக சாபமிட்டாள். இதனால் நான்முகன் திருமாலிடம் முறையிட, திருமால் இத்தலத்தில் விளக்கொளிப் பெருமாளாக நின்றார். மேலும் சரஸ்வதி தேவிக்கும் காட்சியளித்தார்.

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

காமாட்சியம்மன் திருக்கோயில், ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், கைலாசநாதர் கோயில், ஜுரஹரேஸ்வரர் கோயில்

சுருக்கம் :

இக்கோயிலில் மூலவர் கருவறை விமானம் ஸ்ரீகர விமானம் என்றழைக்கப்படுகிறது. இது கரக்கோயில் வகையைச் சார்ந்தது ஆகும். இலட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், ஆழ்வார்கள், வேதாந்த தேசிகர், தீபப்பிரகாசர், கருடன் ஆகியோருக்கு தனித்தனி சிறுகோயில்கள் அமைந்துள்ளன. வைணவ ஆச்சாரியாரான வேதாந்த தேசிகன் என்பவரின் தாய் தனக்கு குழந்தை வேண்டி இத்தலத்துப் பெருமாளிடம் வேண்டினார். பெருமாள் தன் கையில் இருந்த மணியே குழந்தையாக பிறக்கும்படி அருள்பாலித்தார் என தலவரலாறு கூறுகிறது. 1268 ஆம் ஆண்டு தோன்றிய வேதாந்த தேசிகர் 1369 வரை ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். பல நூல்களை வடமொழியில் இருந்து மொழிபெயர்த்தார். மேலும் வரதராஜப் பெருமாள் மீது அடைக்கலப்பத்து என்ற பாமாலையைப் பாடியுள்ளார். இவரது புதல்வன் நயின வரதச்சாரியார் விளக்கொளிப் பெருமாள் கோயிலுக்கு திருப்பணி செய்தார். வேதாந்த தேசிகர் வழிபட்ட இலட்சுமி ஹயக்கிரீவர் திருமேனி இன்றும் கோயிலில் உள்ளது. சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் இவருக்கு அவதார விழா கொண்டாடப்படுகிறது. இத்தலம் பண்டு தர்ப்பைப் புல் மிகுந்த பகுதியாக இருந்ததால் தூப்புல் என வழங்கப்படுகிறது. திருத்தண்கா எனவும் மங்களாசாசனத்தில் குறிப்பிடப்படுகிறது. திருமங்கையாழ்வார் இரண்டு பாசுரங்களில் இத்தலத்தைக் குறிப்பிட்டுள்ளார். குழந்தை வரம் வேண்டியும், கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தலத்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.9-ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு / செப்பேடு :

சுவரோவியங்கள் :

வேதாந்த தேசிகன் மற்றும் விளக்கொளிப் பெருமாளின் தற்கால ஒவியங்கள் உள்ளன.

சிற்பங்கள் :

இலட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், ஆழ்வார்கள், வேதாந்த தேசிகர், தீபப்பிரகாசர், கருடன் ஆகியோருக்கு தனித்தனி சிறுகோயில்கள் அமைந்துள்ளன. கருவறையில் நின்ற நிலையில் விளக்கொளிப் பெருமாள் உள்ளார். திருவீதியுலா செப்புத் திருமேனியும் உள்ளது. வேதாந்த தேசிகருக்கு தனி சிறுகோயிலில் அவரது திருவுருவம் அமைந்துள்ளது.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் விமானம் ஸ்ரீகர விமானம் எனப்படுகிறது. வேதாந்த தேசிகரின் புதல்வன் நயின வரதாச்சாரியாரால் இக்கோயில் முழுவதும் கி.பி.14-ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் வேதாந்த தேசிகர், இலட்சுமி ஹயக்கிரீவர், ஆண்டாள், கருடன் ஆகியோருக்கு தனி சிறுகோயில்கள் அமைந்துள்ளன.

அமைவிடம் :

அருள்மிகு விளக்கொளிப் பெருமாள் கோயில், தூப்புல்-631 501, காஞ்சிபுரம்

தொலைபேசி :

9894443108

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 7.00-9.00 முதல் மாலை 5.00-7.00 வரை

செல்லும் வழி :

சென்னையிலிருந் 75 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

காஞ்சிபுரம்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

காஞ்சிபுரம் விடுதிகள்
சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:48(இந்திய நேரம்)