தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- சங்க கால அரசியல்

  • பாடம் - 6

    A03116 சங்க கால அரசியல்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    சங்க காலத்தில் அரசியல் எவ்வாறு இருந்தது என்பது பற்றி விரிவாக எடுத்துக் கூறுகிறது.

    சங்க காலத்தில் பொருளாதாரம் பலவிதமான தொழில் வளத்தால் மேம்பட்டிருந்த நிலையை விளக்குகிறது.

    பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தனர் என்பது பற்றியும், சங்க கால இறுதியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்பது பற்றியும் விளக்குகிறது.

     

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இப்பாடத்தின் மூலம் மன்னன் எதனைப் பெற்றிருந்தான், எவற்றின் துணைகொண்டு ஆட்சி நடத்தினான் என்பன பற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்கப்பெறுகின்றன.

    சங்க காலத்தில் ஊராட்சி, நகராட்சி என்ற அமைப்புகள் இருந்தது பற்றிப் புரிந்துகொள்ள முடிகிறது.

    பண்டைய தமிழர்கள் உழவுத்தொழிலையும், வாணிபத்தையும் இரு கண்களாகக் கருதி அவற்றை நன்கு வளர்ச்சியுற்ற நிலையில் வைத்து இருந்தனர் என்பது பற்றி அறிய முடிகிறது.

    சங்க கால மக்களின் இல்லற வாழ்க்கை, உணவுப் பழக்கவழக்கங்கள், குலம், கல்வி, வாணிபம், கலை, விளையாட்டு போன்றவற்றைத் தக்க சான்றுகளுடன் புரிந்துகொள்ள முடிகிறது.

    சங்க காலத்தில் கடவுள், சமயம் ஆகியவை எந்த நிலைமையில் இருந்து வந்தன என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

    சங்க கால இறுதியில் தமிழகம் என்னென்ன மாற்றங்களைச் சந்தித்தது என்பது பற்றியும் விளக்கமாக அறிய முடிகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2016 16:41:49(இந்திய நேரம்)