தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- - களப்பிரர் ஆட்சி

  • பாடம் - 1

    A03121 களப்பிரர் ஆட்சி

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    சங்க காலத்திற்குப் பின்பு களப்பிரர் என்னும் இனத்தார் தமிழகத்தை ஆண்டு வந்ததைப் பற்றிக் கூறுகிறது. அவர்கள் அரசாண்ட காலத்தில் என்னென்ன விளைவுகள் தமிழகத்தில் ஏற்பட்டன என்பது பற்றியும் தெளிவாக விளக்குகிறது.

     

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • சங்க காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சியை ஏற்படுத்தியது பற்றியும், அதனால் சங்க கால மரபு அழிய முற்பட்டது பற்றியும் படித்துணரலாம்.
    • களப்பிரர் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? என்பன பற்றி அறிஞர்களிடையே நிலவும் பல்வேறு கருத்துகளை விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.
    • களப்பிரர்கள் சமண சமயத்தையும், பௌத்த சமயத்தையும் சார்ந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
    • களப்பிரர்கள் ஆண்ட காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் இருண்ட காலம் என்று கூறினாலும், நல்லதொரு இலக்கிய வளர்ச்சியை அக்காலம் பெற்றிருந்தது என்ற உண்மையைப் படித்துணரலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:27:15(இந்திய நேரம்)