Primary tabs
5.7 வாழ்க்கை வரலாற்று இலக்கியம்
வாழ்க்கை, வரலாறு என்னும் இரு சொற்களின்
இணைப்பாக இப்பெயர் அமைகின்றது. பொதுமக்களிடையே
கலை, அரசியல், இலக்கியம், அறிவியல் என ஏதாவது துறையில்
புகழ் பெற்றவர்களின் வாழ்க்கையையோ, சுவையான
அனுபவங்களையோ சுவைபடத் தொகுத்து அளிப்பது
வாழ்க்கை வரலாறு இலக்கியம் ஆகும்.
ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, விநோத
ரசமஞ்சரி, வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளின்
புலவர் புராணம், தமிழ்நாவலர் சரிதை,
குருபரம்பராப்பிரபாவம், சேய்த்தொண்டர் புராணம்
என்பவற்றை வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின்
முன்னோடிகள் என நாம் கொள்ளலாம்.
வாழ்க்கை வரலாற்று இலக்கியம் பிறர் வரலாறு, தன்
வரலாறு எனும் இருபெரும் பிரிவுகளை உடையது என்கிறார்
ச.வே.சுப்பிரமணியன். இவ்விரு வகைப் பிரிவிலும் உரைநடை,
கவிதை, கடிதம், நாடகவடிவில் நூல்கள் உள்ளன.
பிறர் வரலாறு கூறும் நூல்கள
சரித்திரம்
தாஷ்கண்ட் வரை
காந்தியடிகளும்
அடிச்சுவட்டில்
ஒருவர் தன் வரலாற்றினைத் தானே எழுதிக் கொள்ளுதல்
தன்வரலாறு ஆகும். பாரதியின் பாரதி அறுபத்தாறு என்ற
நூலைத் தன்வரலாற்றிலக்கிய முதல் நூல் எனலாம். பம்மல்
சம்பந்த முதலியாரின் நாடகமேடை நினைவுகள் நீண்டதாக
ஆறுபகுதிகள் கொண்டமைகிறது. உ.வே.சாவின் என்
சரித்திரம், நான் கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி
என்பன குறிப்பிடத் தக்கன.
• பிற குறிப்பிடத்தக்க நூல்கள்