Primary tabs
A04146 : இருபதாம் நூற்றாண்டு -
இரண்டாம் பகுதி
இருபதாம் நூற்றாண்டு தமிழின் மறுமலர்ச்சிக் காலம்
என்று போற்றப் பெறுகிறது. இந்தியா விடுதலை அடைந்த
பின்பு, நாட்டின் பல்வேறு துறைகளும் வீறுகொண்டு
எழுந்தன. மொழியும் மொழியில் உள்ள எழுதப்படாத,
எழுதப்பட்ட இலக்கியங்கள் புதிய பாதையில் நடைபயின்றன.
ஏற்கெனவே உள்ள இலக்கியத் துறைகள் திறனாய்வு
நோக்கில் அணுகப்பட, பிறமொழிப் பயிற்சியறிவால் தமிழில்
மொழிபெயர்ப்பியல், நாட்டுப்புறவியல், தொல்லியல்,
கல்வெட்டியல், நடையியல், இதழியல், மொழியியல்,
கோயிற்கலை என்ற துறைகள் தோன்றின. அறிவியல் பெற்ற
வளர்ச்சி காரணமாகத் தொலைக்காட்சித் தமிழ், கணினித்
தமிழ், விளம்பரத் தமிழ், பதிப்புத் தமிழ், திரைத்தமிழ்,
மேடைத்தமிழ் எனத் தமிழும் வளர்ந்தது.
தன்னுள் கொண்டு வளர்ந்ததைப் பற்றி அறியலாம்.
அறியலாம்.