தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பதினேழாம் நூற்றாண்டு

  • பாடம் - 2

    A04142 பதினேழாம் நூற்றாண்டு

    பதினேழாம் நூற்றாண்டைப் பொறுத்தவரை சமய இலக்கியங்கள் செழித்தன. ஏற்கெனவே தோன்றியிருந்த சிற்றிலக்கியங்கள் நன்கு வளர்ந்தன. இந்நூற்றாண்டின் மைல் கற்களாகச் சிவப்பிரகாசரும் குமரகுருபரரும் திகழ்கின்றனர். மடங்களின் ஆதரவில், சிற்றரசர்களின் நிழலில், வள்ளல்களின் வள்ளன்மையில் தமிழ் செழித்தது; நீதி நூல்கள், இலக்கண நூல்கள், மொழியாக்கப் புராணங்கள், கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு எனப் பரந்து விரிந்தது. இவற்றை விளக்குவதே இந்தப் பாடத்தின் நோக்கம்.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    •

    பதினேழாம் நூற்றாண்டில் சைவ இலக்கியம் வளர்ச்சி பெற்றதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    •

    வைணவ இலக்கியம் அடைந்த வளர்ச்சியை அறியலாம்.

    •

    இந்நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல்கள் பற்றிய அறிமுகம் பெறலாம்.

    •

    கிறித்தவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)