தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A06134 நாட்டுப்புறப் பாடல்கள் II

  • பாடம் - 4

    A06134 நாட்டுப்புறப் பாடல்கள்-II

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    E

    இந்தப் பாடம் நாட்டுப்புறப் பாடல்களின் காலம், கற்றுக்கொள்ளும் முறை, இன்றைய நிலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. நாட்டுப்புறப் பாடல்களின் வகைகளையும் தெரிவிக்கிறது. நாட்டுப்புறப் பாடல்களின் வாயிலாகக் கல்வி, தகவல் தொடர்பு, எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தல் போன்ற பயன்களைப் பெறலாம் என்பதையும் கூறுகிறது.

    நாட்டுப்புறப் பாடல்கள் பல அறிவுரைகளையும் கூறுகின்றன. அவை பற்றியும் இந்தப் பாடம் எடுத்துரைக்கிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


    • நாட்டுப்புறப் பாடல்களின் வகைகளையும் அவை பாடப்படும் சூழல்களையும் நோக்கங்களையும் இனம்காண இயலும்.
    • நாட்டுப்புறப் பாடல்களை மக்கள் எவ்வாறு கற்றுக் கொள்கின்றனர்-கற்றுத் தருகின்றனர் என்பதை அறிய இயலும்.
    • நாட்டுப்புறப் பாடல்கள் எவ்வாறு மரபுவழிக் கல்வி நிறுவனமாகச் செயல்படுகின்றன என்பதை அறியலாம்.
    • அடித்தட்டு மக்களின் அடக்கிவைக்கப்பட்ட எதிர்ப்புக் குரலாக நாட்டுப்புறப் பாடல்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை மதிப்பிட இயலும்.
    • நாட்டுப்புறப் பாடல்களின் இன்றைய நிலை குறித்தும் அறிந்து கொள்ள இயலும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:34:31(இந்திய நேரம்)