தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதியுகம்

  • பாடம் - 5

    C01125   தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதியுகம்

     

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?  

    இந்தப் பாடம் தமிழ்க்கவிதையின் போக்கில் மாற்றம் அல்லது திருப்பம் ஏற்படுத்திய பாரதியின் பாட்டுத் திறத்தை வெளிப்படுத்த முயல்கிறது.

    அவ்வகையில் பாட்டு வடிவம், பாடுபொருள் ஆகிய இரு வழிகளிலும் பாரதியார் புகுத்திய புதுமைகளை இனங்காட்டுகிறது.

    பாரதியின் தாக்கம் பிற கவிஞர்களை வசப்படுத்திப் புதிய திருப்பத்தை நிலைபெறச் செய்த பாங்கையும் விவரிக்க முயல்கிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

     

    •  

    தமிழ்க்கவிதை வரலாற்றில் பாரதி ஒரு திருப்பு முனையாக அமைந்ததை விளக்க முடியும்.

    •  

    பாரதி பயன்படுத்திய புதிய பாடுபொருள்களைத் தொகுத்துக் கூற இயலும்.

    •  

    புதுமைகளைப் புகுத்திய அதே நிலையில் பாரதி தமிழ்க் கவிதை மரபைப் போற்றிய நிலையை எடுத்துரைக்க இயலும்.

    •  

    பாரதி படைத்த புதிய வடிவங்கள் எவை என்பதை அடையாளம் காண முடியும்.

    •  

    பாரதி காட்டிய வழியில் நடை பயின்ற கவிஞர்கள் பற்றிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

    •  

    தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதியின் யுகம் மலர்ந்து தன் அடிச்சுவட்டைப் பதித்திருப்பதை இனம் காண இயலும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:43:21(இந்திய நேரம்)