தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி

பேராசிரியர் ம.செ. இரபிசிங்

இவர் கணிதத்தில் அடிப்படைப் பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டமும்
பெற்றவர். அண்ணாவின் மொழிநடையைப் பற்றி ஆய்வு செய்து எம்., பில் பட்டமும், ‘தமிழ்,
மலையாள நாவல்கள் - ஓர் ஒப்பியல் ஆய்வு’ எனும் தலைப்பில் முனைவர் பட்டமும்
பெற்றுள்ளார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை 9 ஆய்வு நூல்கள் வெளியிட்டுள்ளார். பேராசிரியர்
அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களின் ‘செங்கோல் வேந்தர்’, ‘தமிழில் சிறுகதையின்
தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

ஒப்பியலறிஞரான இவர் மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், செர்மன் ஆகிய மொழிகளையும்
கற்றுள்ளார்.
உலகக் கருத்தரங்குகளிலும், அகில இந்திய கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு
ஒப்பிலக்கியம் பற்றி 17 ஆய்வுக்கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். ‘பண்பாட்டு ஆய்வு’ எனும்
இருமொழி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் பதினெட்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகவும், பூண்டி
புஷ்பம் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் முதுகலைப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத்
தலைவராகவும்     பணியாற்றியுள்ளார். பனாரசுப் பல்கலைக்கழகத்தில் ஈராண்டுகள்,
பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னைப்
பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையில் சிறப்பு நிலைப் பேராசிரியராகவும் பணி
செய்துள்ளார். தற்பொழுது, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் மூதறிவுரைஞராகப்
பணியாற்றுகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2017 17:21:57(இந்திய நேரம்)