தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-நான்மணிக்கடிகை

 • பாடம் - 2

  C01212 நான்மணிக்கடிகை
  E

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


  இல்லறத்தில் மகளிர் பெறுமிடம், மக்கள் செல்வத்தின் பெருமை ஆகியவை பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தின் முதலில் கூறப்படுகின்றன.

  கல்வி, செல்வம், நட்பு, இனிய சொற்கள் ஆகியவை எவ்வாறு ஒரு மனிதனுக்குச் சிறப்புத் தருவனவாக அமைகின்றன என்பது அடுத்துச் சொல்லப்படுகிறது.

  அரசருக்கு உரிய சிறப்பு இயல்புகள் எவை, கற்றவருக்கு உரிய சிறப்பு இயல்புகள் எவை, மக்களது சிறப்பு இயல்புகள் எவை, என்பவை பற்றிய செய்திகள் எடுத்துரைக்கப்படுகின்றன.

  இறுதியாக, வாழ்வியல் உண்மைகளாக, ஒவ்வொருவரும் பின்பற்றக்  கூடியதாக அமைந்தவை, பின்பற்றக் கூடாத வகையில் அமைந்துள்ளவை ஆகியவை பற்றிய செய்திகள் சொல்லப்படுகின்றன.  இந்தப் பாடத்தைக் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  இடைக்கால இலக்கியங்களில் அற இலக்கிய வகைகளுள் நான்மணிக்கடிகை வாழ்வியல் நெறிகளைத் தொகுத்துரைக்கும் நூலாக விளங்குவதை அடையாளம் காணலாம்.
  மனித இயல்பு, அரசர் இயல்பு, சான்றோர் இயல்பு என்று பலதரப்பட்ட மனிதர் இயல்புகளைச் சுட்டிக்காட்டி விளக்கும் நூலாக நான்மணிக்கடிகை நிற்பதை இனம் காணலாம்.
  வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை யாவை, நீக்கப்பட வேண்டியவை யாவை என்பனவற்றை அறநோக்கில் காட்டியிருப்பதைப் பட்டியல் இடலாம்.
  பறவைகள், விலங்குகள், நீர்நிலைகள் என்று இயற்கையோடு ஒட்டியே கருத்துகள் ஆங்காங்குச் சொல்லப்படுவதைக் காணலாம்.
  தத்துவம் சொல்வதிலும், கருத்துகளை வெளிப்படுத்த உவமை அணி போன்றவற்றைக் கையாள்வதிலும் நான்மணிக்கடிகை சிறந்து விளங்குகிறது என்பதை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:09:25(இந்திய நேரம்)