தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-ஆசாரக்கோவை - முதுமொழிக்காஞ்சி

 • பாடம் - 5

  C01215 ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி
  E

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

   

  ஒருவன் தன் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிகளும், கற்றுக்கொள்ள வேண்டிய நெறிகளும் பல உள்ளன. அவற்றைப்போல, விலக்கக்கூடியவைகளும் பல உள்ளன. அவை பற்றி ஆசாரக்கோவை கூறும் செய்திகள் இந்தப் பாடத்தில் கூறப்படுகின்றன.

  இந்த உலகத்தில் பல கூறுகள் சிறப்புடையனவாகத் திகழ்கின்றன. சில கூறுகள் சிறப்பு இல்லாதவைகளாகக் காணப்படுகின்றன. அவை பற்றி முதுமொழிக் காஞ்சி கூறும் கருத்துகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி என்ற இரண்டு அற நூல்களும் சிறந்து விளங்குவதை இனம் காணலாம்.

  • அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல நெறிகளை இலக்கியத்தில் பதிவு செய்திருப்பதை ஆசாரக்கோவை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

  • தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதற்கிணங்க சிறுவயது முதலே உண்ணல், உறங்கல், நீராடல், பெரியவர்களுடன் பேசும் முறை ஆகியன பற்றிய நல்ல செய்திகள் வரையறை செய்யப்பட்டிருப்பதை ஆசாரக்கோவையால் அறியலாம்.

  • ஆன்றோரின் அனுபவ மொழிகள் முதுமொழிக்காஞ்சி என்ற பெயரில் அமைந்து வாழ்வியல் உண்மைகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதை இனம் காணலாம்.

  • வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டியன, விலக்க வேண்டியன ஆகியவற்றை ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி ஆகிய இரு நூல்களுமே கூறுகின்றன. அவற்றைப் பட்டியல் இடலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:12:54(இந்திய நேரம்)