தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 4)

    தொல்காப்பியம், நன்னூல் ஆசிரியர்கள் எழுத்து ஒலிகள் பிறப்பதில் தெரிவிக்கும் கருத்துகளின் வேற்றுமையைப் புலப்படுத்துக.

    வேற்றுமைகள் :
    (1)

    தொல்காப்பியர் காற்று மேலே எழும்பித் தங்கும் இடங்களை மூன்று என்று குறிப்பிடுகின்றார். நன்னூலார் காற்று மேலே எழுந்து தங்கும் இடங்களாக நான்கு உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார்.

    தொல்காப்பியம்
    நன்னூல
    தலை
    நெஞ்சு
    கழுத்து
    கழுத்து
    நெஞ்சு
    உச்சி (தலை)
    மூக்கு
    (2)

    எழுத்தொலிகள் பிறக்கப் பயன்படும் உறுப்புகளைத் தொல்காப்பியர் ஒட்டு மொத்தமாக எட்டு என்று விளக்குகின்றார். நன்னூலார், இவற்றில் இதழ், நாக்கு, பல், அண்ணம் என்ற நான்கு உறுப்புகளை மட்டுமே எழுத்துப் பிறப்பிற்கு இயங்கும் உறுப்புகளாகக் குறிப்பிடுகின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:22:44(இந்திய நேரம்)