தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.4 தொகுப்புரை

  • 5.4 தொகுப்புரை

    வறுமையில் வாடிய பாணனின் வறுமை நீங்குவதற்கு வழி காட்டும் வகையில் பரிசு பெற்ற பாணனின் வழிகாட்டுதல் அமைந்துள்ளதை இப்பாடம் உணர்த்துகிறது. மேலும், வறிய பாணனுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நல்லியக்கோடனின் பெருமை, புகழ், வள்ளல் தன்மை ஆகியவற்றைப் பிறர் புகழ்வதைப் பாணன் சுட்டிக் காட்டுகிறான். அதுமட்டுமன்றி அவனிடம் சென்றால் கிடைக்கும் பரிசுப் பொருள்களையும் வரிசைபடக் கூறுவது பாணனுக்குத் தன் வறுமை நீங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    சிறுபாணனின் கையில் இருக்கும் சிறிய யாழ் என்று கூறப்படுவது எது?

    2.

    பாணர்களுக்கு நல்லியக்கோடன் கொடுத்த ஆடை எத்தகையது?

    3.

    சமையல் கலையில் வல்லவன் யார்?

    4.

    வறுமையில் வாடும் ஒருவனுக்குத் துன்பத்தை நீக்குவதில் முக்கியமானவை எவை?

    5.

    பாணனுக்கு நல்லியக்கோடன் கொடுத்த பரிசில்கள் யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 10:46:24(இந்திய நேரம்)