தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கபணல்

  • 2.5 பேணல்

    அடுத்த நிலை பேணல். பூசல் மாற்று, சுரத்துய்த்தல் என்னும் இரண்டு துறைகளை இதில் அடக்கலாம்.

    2.5.1 பூசல் மாற்று

    ஆநிரையைக் கவர்ந்தவர்க்கும் அவற்றைப் பறிகொடுத்தவர்க்கும் இடையே கைகலப்பால் சலசலப்பு ஏற்படுமல்லவா? அது, பூசல். இப்பூசலை, வெட்சி மறவர் தமது தொழிலால் மாற்றுகின்றனர் (முடிவுக்குக் கொண்டு வருகின்றனர்). மாற்றும் அது, மாற்று எனப்படுகின்றது. எனவே இந்தத் துறை பூசல் மாற்று ஆகும்.

    2.5.2 சுரத்துய்த்தல்

    சுரம் - கடத்தற்கரிய நிலம். உய்த்தல் - செலுத்தல். கவர்ந்த ஆநிரைகளைச் சுரவழியில் வருத்தமுறா வண்ணம் செலுத்துவது காரணமாகச் சுரத்துய்த்தல் எனப் பெற்றது.

    • கொளுவின் பொருளும் கொளுவும்
    அரும்சுரத்தும் அகன்கானத்தும்
    வருந்தாமல் நிரைஉய்த்தன்று.

    வருந்தாமல் உய்த்தலாவது, ஆநிரைகளுக்குப் புல்லும் நீரும் தந்து பாதுகாத்தல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-11-2017 11:58:39(இந்திய நேரம்)