தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

- பிற்காலக் கட்டடக் கலை

  • பாடம் - 2

    D05112 : பிற்காலக் கட்டடக் கலை
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        சங்கம் மருவிய காலத்திலும், இடைக்காலத்திலும், கட்டடங்கள் பல நோக்கங்களில் கட்டப்பட்டன என்பது சுட்டிக் காட்டப்படுகிறது. சிறப்பாகப் பூம்புகாரில் அமைந்த மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் ஆகியவையே யல்லாமல், அங்கே அமைந்திருந்த ஐவகை மன்றங்கள், பல கோயில்கள் முதலியவை கூறப்படுகின்றன.

        சிலப்பதிகாரம் காட்டும் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ஆடலரங்கம் பற்றிய விவரங்கள் கூறப்படுகின்றன.

        தமிழ்நாட்டில் மிகச் சிறப்புற்றுத் திகழும் காஞ்சிபுரத்தின் நகரமைப்பும், பல்வகைச் சமயத்தாரும் இனிது வாழ்ந்திருந்த இடங்களும் கூறப்படுகின்றன.

        நாட்டு வளத்திற்கு நீர் ஆதாரங்களின் தேவையையுணர்ந்து மன்னர்கள் நீர்ப்பாசனத்திற்கு வழிவகைகள் கண்ட திறம் பேசப்படுகிறது.

        அரண்மனை, மடங்கள், ஆசிரமங்கள், தெப்பக்குளம், அணைகள் போன்றவை கட்டப்பட்ட கலைத்தன்மை குறித்தும் குறிப்பிடுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • பகைவர்கள் போர்தொடுத்து நாட்டை நெருங்கினால் பாதுகாப்புடன் இருத்தல் வேண்டுமென்ற எண்ணத்தில் வலுவான கோட்டைகள் தேவை என்பதை அறியலாம்.

    • கட்டடங்கள் வரலாற்றுக்குத் துணை செய்வனவாக உள்ளன என்பது தெரியவரும்.

    • சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அளவு கடந்த கற்பனையைக் காண இயலாது. எனவே, அக்காலத்து எழுந்த கட்டடங்களைப் பற்றிய செய்திகள் உண்மையின்பாற் பட்டவை என்று அறியலாம்.

    • சிலப்பதிகாரம் காட்டும் ஆடலரங்கத்தை மீண்டும் அமைத்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் தோன்றும்.

    • காஞ்சிபுரத்தின் பெருமை பல கோணங்களில் நோக்கும் படியாக உள்ளது. சமய சங்கமத்திற்கு வழிகோலிய இடமென்று நினைக்கத் தோன்றும்.

    • நீர் ஆதாரம் தேடும் வகையில் அக்காலத்து மன்னர்கள் பாடுபட்டனர்; அதனால் நீர்ப்பாசனம் நன்கு நடை பெற்றது; பயிர்வளமும் உயிர்நலமும் உண்டாகும் சூழல் உருவாகியது என்பதை உணரலாம்.

    • சமய நம்பிக்கை வளரக் கட்டடக்கலையும் துணை புரிந்துள்ளதை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:41:15(இந்திய நேரம்)