தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

- கீர்த்தனை இசை

  • பாடம் - 4

    D05134 கீர்த்தனை இசை

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        ஆதிமும்மூர்த்திகளாகிய முத்துத்தாண்டவர், அருணாசல கவிராயர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய மூவரைப் பற்றிய அறிமுகம் செய்யப்படுகிறது.

        மூவரின் வாழ்க்கைப் பின்னணி, அவர்கள் பாடிய கீர்த்தனைகள், அவற்றுள் மக்களிடையே மிகப் பிரபலமானவை ஆகிய அனைத்தும் விரிவாகப் பேசப்படுகின்றன.

        பத்தொன்பது, இருபது ஆகிய நூற்றாண்டுகளில் வாழ்ந்த கீர்த்தனையாளர்கள் பற்றிப் பேசப்படுகிறது.

        கோபாலகிருஷ்ணபாரதியாருடைய வாழ்க்கைப் பின்னணி, அவருடைய இசைப்படைப்புகள் ஆகியன விளக்கமாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக, அவருடைய நந்தனார் கீர்த்தனை விரிவாக இடம் பெறுகிறது. அவருடைய பிரபலமான பாடல்கள் சிலவும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • தமிழில் முதன் முதலாகக் கீர்த்தனை பாடிய மூவரை இனங்காணலாம்.
    • மூவர் வாழ்ந்த காலமும் வாழ்க்கைப் பின்னணியும் எத்தகையது என அறிந்து கொள்ளலாம்.
    • இவர்கள் பாடிய கீர்த்தனைகள் தெய்வம் தொடர்பானவை என்பதை அடையாளங் காணலாம்.
    • இனிய இராக அமைப்பிலானவை எவையெனப் பட்டியலிடலாம்.
    • பக்தி உணர்வோடு பாடப்பட்டவைகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.
    • தமிழகத்தின் முதல் தமிழ்க் கீர்த்தனையாளர் மூவரைத் தொடர்ந்து வந்த கீர்த்தனையாளர் யாவர் என்பதை இனங்காணலாம்.
    • தமிழ்க் கீர்த்தனையாளர் கோபாலகிருஷ்ண பாரதியாரின் இசைப் பின்னணி, இசைப்பணி ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
    • கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்" என்னும் பாடல் தொகுதியின் சிறப்பினை அறிந்து கொள்ளலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:04:13(இந்திய நேரம்)