Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் தமிழ் வானொலி நாடகம் பற்றியது. வானொலி நாடகத்தின் வரலாறு, தன்மைகள், அமைப்பு, கூறுகள், வகைகள், படைப்பாளிகள், படைப்புகள், தயாரிப்பாளர்கள் குறித்த செய்திகளை விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறலாம்.
வானொலி நாடகத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்து
அறிந்து கொள்ளலாம்.
வானொலி நாடகத்தின் தனித்த சிறப்புத்
தன்மைகள்,
வரம்புகள், அமைப்பு ஆகியன குறித்துத் தெரிந்து
கொள்ளலாம்.
வானொலி நாடகங்களின் இன்றிமையாத கூறுகளான
உரையாடல், ஒலிக்குறிகள்,
பின்னணி இசை ஆகியவை
குறித்தும் அறிந்து
கொள்ளலாம்.
வெற்றிபெற்ற நாடகத் தயாரிப்பாளர்கள்,
நாடக
ஆசிரியர்கள், நாடகப் படைப்புகள் குறித்துத்
தெரிந்து
கொள்ளலாம்.
வானொலி நாடக நுட்பங்களை அறிவதன் மூலம்
அதனைச் சுவைக்கவும், முடிந்தால் படைக்கவும் கூடிய
திறனையும் தூண்டுதலையும்
பெறலாம்.