தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திரைப்பட மொழிபெயர்ப்பின் சிறப்புகள்

  • 6.4 திரைப்பட மொழிபெயர்ப்பின் சிறப்புகள்

    பிறமொழித் திரைப்படங்கள், தமிழில் மொழிபெயர்க்கப்படும்போது, பிறமொழியின் தொடரமைப்பினுக்கேற்பத் தமிழிலும் புதிய தொடர்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும் புதிய சொல்லாக்கங்கள் தமிழில் தோற்றம் பெறுகின்றன. திரைப்பட மொழிக்கெனத் தனித்து வடிவமைக்கப்படும் மொழியினால், தமிழ் மொழியும் வளம் அடைகிறது. உலக மொழிகளில் ஏற்படும் புதிய மாற்றங்களை, மொழிபெயர்ப்பு மூலம் தமிழ்த் திரைப்படங்கள் பரந்துபட்ட மக்களிடம் கொண்டு செல்கின்றன. இதனால் தமிழ்மொழி அண்மைக் காலத்தியதாக மாற்றமடைகின்றது. மேலும் தமிழில் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் கருத்தியல், தரம் ஆகியவற்றிலும் மொழி பெயர்ப்புகள் புதிய போக்குகளை உருவாக்குகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 11:14:40(இந்திய நேரம்)