தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 3.7 தொகுப்புரை-3.7 தொகுப்புரை

  • 3.7 தொகுப்புரை

    தேவாரத் திருவாசகங்கள் என்ற இப்பாடத்தில் தேவாரம் மற்றும் திருவாசகங்களின் தொகுப்பு முறை, பதிக எண்ணிக்கை, பாடல் தொகை, பாடப் பெற்ற தலங்கள், அமைந்துள்ள பண் அடைவுகள், தேவாரம் பாடிய மூவரின் வரலாற்றுச் சுருக்கம், அவர் தம் பெருமைகள், பாடல் சிறப்பு, வாழ்ந்த காலம் முதலியன முறையாக விளக்கம் செய்யப் பெற்றுள்ளன. அரிய தேவாரத் திருவாசகத் தொடர்களும், பெரிதும் போற்றப்படும் அருள் பாடல்களில் சிலவும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு வழங்கப்பெற்ற பெயர்களில் இரண்டினைக் குறிப்பிடுக.
    2.
    திருத்தொண்டத் தொகையுள் இடம் பெற்றுள்ள தனியடியார், தொகையடியார் எத்தனை பேர்?
    3.
    சுந்தரர் தேவாரத்தில் நாம் காணும் அரிய சொல்லாட்சிகளில் இரண்டினைக் குறிப்பிடுக.
    4.
    எட்டாம் திருமுறையுள் இடம் பெற்றுள்ள இரண்டு நூல்களின் பெயர்களை எடுத்து எழுதுக
    5.
    திருச்சிற்றம்பலக் கோவையார் நூலின் யாப்பு, பாடல் தொகைகளைக் குறிப்பிடுக.
    6.
    இம்மையே உன்னைச்சிக்கெனப் பிடித்தேன். எங்கு எழுந்தருளுவது இனியே - என்று பாடியது யார்?

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 17:01:42(இந்திய நேரம்)