தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 2 Main-விடை

2 - விடை

    கண்ணகி சமண சமயத்தைச் சார்ந்தவள். சாவக நோன்பினள். அதாவது சமணஇல்லற நெறியில் நிற்பவள். சமண சமயம் மூவகை மூடங்களைப் பற்றிக் குறிப்பிடும். அவற்றில் ஒன்று உலகமூடம் என்பது. அதாவது மலையின் மேல் ஏறி விழுதல், நெருப்பில் பாய்தல், ஆறு, குளம், கடல் இவற்றில் மூழ்குதல் ஆகிய செயல்பாடுகளால் புண்ணியம் கிடைக்குமென நம்புதல். இவை சமண சமயத்திற்கு உடன்பாடன்று. அதனால் சாவக நோன்பியாகிய கண்ணகி சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய பொய்கைகளில் மூழ்க மறுத்துரைக்கிறாள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:20:50(இந்திய நேரம்)