Primary tabs
ஐம்பெரும்
காப்பியங்களில் ஒன்றாகிய குண்டலகேசி பௌத்த சமயச் சிறப்பை எடுத்துரைக்கத்
தோன்றியது. அக்காலக் கட்டத்தில் சமணரும் பௌத்தரும் தம்முள் முரண்பட்டிருந்தனர்.
அதனால் ஆருகத சமயமாகிய சமண சமயத்தைப் பழித்தும் குறைத்தும் பேசியது குண்டலகேசி.
அதற்கு விடையளிப்பது போலவும் விளக்கம் தருவது போலவும் எழுதப்பட்டது நீலகேசி தவிர,
பௌத்த சமயக்
கொள்கைகளைக் குற்றம் சாட்டியும் குறை கூறியும் நிற்பதோடு சமண சமயக் கோட்பாடுகளை
விளக்கவும் உயர்த்தவும் நீலகேசி
எழுதப்பட்டது.