Primary tabs
வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிறுகதைப்படைப்பு,
வாழ்க்கையில் உள்ள சிக்கல்களையும் எடுத்துக் கூறுகிறது. தனி
மனித வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள், சமூகத்தில் உள்ள
சிக்கல்கள் ஆகியவற்றை இந்தப் பாடம் வெளிப்படுத்துகிறது.
கூடவே அந்தச் சிக்கல்கள் தீர்வதற்குரிய வழிமுறைகளை
நேரடியாகவோ மறைமுகமாகவோ சிறுகதைகள் தெரிவிக்கின்றன
என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
சிறுகதைகளின் அமைப்பையும் நோக்கத்தையும் அறிந்து கொள்ளலாம்.
-
தனி மனிதச் சிக்கல்களையும் சமூகச் சிக்கல்களையும் சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன என்பதை அறியலாம்.
-
சிறுகதைகள் சிக்கல்களை முன்னிறுத்துவதோடு, அவற்றுக்கான தீர்வுகளையும் தருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
-
இவ்வாறு தனிமனித முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு சிறுகதைகள் பங்களிக்கின்றன என்பதைத் தெளியலாம்.