தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் 6-P20446 - இயந்திரப் பிரிவு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    செய்தித்தாள்களில் இயந்திரப் பிரிவு மிகவும் வேகமாக
இயங்க வேண்டும். இயந்திரப் பிரிவில் ஐந்து பிரிவுகள்
இயங்கி வருகின்றன. அவற்றின் பணி இப் பாடத்தில்
விளக்கப்பட்டுள்ளது. ஒரு நாளிதழின் அனைத்துப்
பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நாளிதழ்
தரமாக வெளிவர முடியும் என்பதை இப்பகுதி விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால்
என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தை படித்து முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறலாம்.

¥
ஒரு நாளிதழின் இயந்திரப் பிரிவு என்னென்ன
பணிகளைச் செய்கின்றது என்பதைத் தெளியலாம்.
¥
பெரிய நாளிதழ்களில் தானாகவே அச்சுக் கோக்கின்ற
இயந்திரங்கள் உள்ளதையும் சிறிய நாளிதழ்களில் வேறு
துறைகளில்     அச்சுக்     கோப்பதையும்     அறிந்து
கொள்ளலாம்.
¥
கையினால் அச்சுக் கோத்தல், தனி எழுத்து (மோனோ)
அச்சுவார்ப்பு முறை, தொடர் எழுத்து (லைனோ)
அச்சுவார்ப்பு முறை என்று மூன்று முறைகள் அச்சுக்
கோக்கும் பிரிவில் உள்ளதை அறியலாம்.
¥
பெரிய     இதழ்கள்     அச்சுக்     கட்டைகளைச்
செதுக்குவதற்காகத் தனித்துறையினை வைத்துள்ளன.
ஆனால் சிறிய இதழ்கள் அச்சுக் கட்டைகளைக் கூலி
கொடுத்துச் செய்து வாங்குகின்றன     என்பதைப்
புரிந்துகொள்ளலாம்.
¥
அச்சடிக்கும் முறைகளில் இன்று ஆப்செட் முறையே
அதிக அளவில் நாளிதழ்களில் பயன்படுத்தப்பட்டு
வருகின்றது. விரைவாகவும் குறிப்பிட்ட நேரத்தில்
தேவையான படிகளை அச்சடிக்கவும் இது மிகவும்
உதவியாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
¥
நாளிதழ்களில் அச்சுப்படி திருத்தும் பணி மிகவும்
இன்றியமையாதது. நாளிதழ்கள் தரமாக வெளிவர
வேண்டுமானால் அச்சுப்படி திருத்துவோர் மிகவும்
கவனமாகப் பணிபுரிய வேண்டும் என்பதையும் அறிந்து
கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:33:18(இந்திய நேரம்)