தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.6 தொகுப்புரை

1.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை பரணி இலக்கியம் பற்றிய
செய்திகளை அறிந்து இருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து
என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை
மீண்டும் ஒரு முறை நினைவுப்படுத்திப் பாருங்கள்.
பரணி என்றால் என்ன என்பது பற்றியும் பரணி சொற்பொருள்
விளக்கம் பற்றியும் அறிந்து இருப்பீர்கள்.

பரணி பற்றிப் பாட்டியல் நூல்கள் தரும் இலக்கண
விளக்கங்களை அறிந்து இருப்பீர்கள்.

பண்டைய நாள் பரணி இலக்கியங்கள் தொடங்கிப் பரணியின்
வளர்ச்சி மாற்றம் பற்றிய செய்திகளை அறிந்து இருப்பீர்கள்.

கலிங்கத்துப் பரணி பற்றிச் சிறப்பான செய்திகளை
அறிந்திருப்பீர்கள். கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர்,
பாட்டுடைத் தலைவன், இலக்கியச் சிறப்புகள் முதலியன பற்றி
விரிவாக உணர்ந்து இருப்பீர்கள்.

1.
கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் ..................................
ஆவார்.
2.
கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன்
................... ஆவான்.
3.
கருணாகரன்.......................... மன்னனின்
படைத்தலைவன் ஆவான்.
4.
செயங்கொண்டார் இயற்றிய நூல்கள்
மூன்று ..................
5.
சயங்கொண்டாரும் சயங்கொண்டானும் - விளக்குக.
6.
காளியின் தோற்றப் பொலிவை விளக்குக.
7.
மறவர்கள் காளிக்குத் தங்களைப் பலியிட்டுக்
கொள்ளும் நிகழ்ச்சியை விவரிக்க.
8.
பேய்களின் செயல்பாடு பற்றிக் குறிப்புரை தருக.
9.
கடை திறப்பு மகளிரின் செயல்களுள் இரண்டினை
விவரிக்க.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:04:08(இந்திய நேரம்)