Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
8. பேய்களின் செயல்பாடு பற்றிக் குறிப்புரை தருக.
கலிங்கப் போர் முடிவிற்கு வருகிறது. சோழர் வீரர்கள்
வெற்றி வாகை சூடுகின்றனர். இராமாயணம், பாரதம்
போன்ற வீரம் செறிந்த இந்தப் போர்க்களத்தைக் காண
வருமாறு
பேய் காளியை அழைக்கிறது. காளியும் பேய்கள்
புடைசூழப் போர்க்களத்தைப் பார்க்கிறாள். களத்தைக்
கண்டு
மகிழ்ந்த காளி கூழ் சமைக்குமாறு பேய்களுக்குக்
கட்டளை
இடுகின்றாள்.
பேய்கள் கூழ் சமைக்க ஆயத்தமாகின்றன.
வீரர்களின்
தலைகள் கொண்டு, அடுப்பு அமைக்கப்படுகின்றது.
யானைகளின் வயிறுகள் பானைகளாகப் பயன்படுகின்றன.
குதிரையின் குருதி உலை நீராக ஊற்றப்படுகின்றது.
வீரர்களின் மூளை தயிராகும்.
இறைச்சியாகிய செந்தயிர் பானைகளில்
நிரப்பப்படுகின்றது. குதிரையின் பற்கள் பூண்டாகும்.
கலிங்க
வீரர்களின் பற்கள் அரிசியாகும். இந்தப்
பொருள்களைக்
கொண்டு கூழ் சமைக்கப்படுகின்றது.