தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.7 தொகுப்புரை

2.7 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரையும் தமிழ் இலக்கிய வகையில்
ஒன்றாகிய பிள்ளைத்தமிழ் பற்றிய செய்திகளைத் தெரிந்து
கொண்டீர்கள். அச்செய்திகளை மீண்டும் ஒருமுறை
நினைத்துப் பாருங்கள்.

பிள்ளைத்தமிழ் என்றால் என்ன என்பது பற்றிய
செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.

பிள்ளைத்தமிழ் இலக்கிய அமைப்புப் பற்றித் தெரிந்து
கொண்டீர்கள்.

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பற்றிச் சிறப்பு
நிலையில் செய்திகளைப் புரிந்து கொண்டீர்கள்.

மீனாட்சியம்மை     பிள்ளைத்தமிழின்     ஆசிரியர்
வரலாற்றை அறிந்து கொண்டீர்கள்.

இப்பிள்ளைத்தமிழின் இலக்கிய நயம் வாய்ந்த பாடல்கள்
பற்றியும் தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றியும் தெரிந்து
கொண்டீர்கள்.

1.
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலை
இயற்றிய ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக.
2.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எந்த மன்னன்
காலத்தில் அரங்கேற்றப்பட்டது.
3.
குமரகுருபரர் இயற்றிய நூல்கள் நான்கின் பெயரைக்
குறிப்பிடுக.
4.
தொடுக்கும் கடவுட் பழம்பாடல் எனும் பாடல்வழி
மீனாட்சியம்மையின் மாண்புகளை விளக்குக.
5.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அக, புற மரபுகள்
கையாளப்பட்ட விதத்தை விவரிக்க.
6.
மீனாட்சியம்மை     பிள்ளைத்தமிழ்     வழியாக
அறியப்பெறும் தமிழின் சிறப்புகளை விளக்குக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:05:39(இந்திய நேரம்)