தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.6 தொகுப்புரை

3.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரையும் இந்தப் பாடத்தின் மூலம்
என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை
ஒரு முறை மீள நினைத்துப் பாருங்கள்!

பள்ளு என்றால் என்ன என்பது பற்றியும் பள்ளுவின்
தோற்றம் பற்றியும் செய்திகளை அறிந்து கொண்டோம்.

பள்ளு இலக்கிய அமைப்பைப் புரிந்து கொண்டோம்.

முக்கூடற் பள்ளு பற்றிய பொதுவான செய்திகளையும்
இலக்கியச் சிறப்புகளையும் அறிந்து கொண்டோம்.

பள்ளர்களின் வாழ்க்கை முறை, வளோண் தொழில், சமய
நிலை பற்றிய செய்திகளை முக்கூடற் பள்ளு வழியே அறிந்து
கொண்டோம்.

1.
முக்கூடல் என்ற பெயர் தோன்றக் காரணம் என்ன?
2.
முக்கூடற் பள்ளுவின் காலம் எது?
3.
முக்கூடற் பள்ளு சிறப்பித்துக் கூறும் கடவுள் பெயர்
என்ன?
4.
முக்கூடல் நகரின் சிறப்பினைப் புலப்படுத்துக.
5.
பள்ளியர் ஏசலில் சமயம் எவ்வாறு இடம்
பெற்றுள்ளது?



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:06:54(இந்திய நேரம்)