தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.4 தொகுப்புரை

6.4 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரையும் அந்தாதி இலக்கியம் பற்றியும்
அபிராமி அந்தாதி பற்றியும் செய்திகளைத் தெரிந்து
கொண்டீர்கள் அல்லவா? அவற்றை மீண்டும் ஒருமுறை
நினைவுபடுத்திப் பாருங்கள்.

அந்தாதி என்றால் என்ன என்பது பற்றித் தெரிந்து
கொண்டீர்கள்.

அந்தாதியின் தோற்றம், அந்தாதியின் வகைகள், அந்தாதியின்
பொருள் அமைப்பு ஆகிய செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.

சிறப்பு நிலையில் அபிராமி அந்தாதி பற்றிப் படித்தீர்கள்.

அபிராம பட்டரின் வரலாற்றைத் தெரிந்து கொண்டீர்கள்.

அன்னை அபிராமியின் உருவ வர்ணனை, அருள் செயல்கள்
பற்றிப் பட்டர் பாடிய பாடல்களின் நயங்களைத் தெரிந்து
கொண்டீர்கள்.

1.
அபிராமி அந்தாதியின் ஆசிரியர் பெயர் என்ன?
2.
அபிராதி அந்தாதி பாடக் காரணம் என்ன?
3.
அபிராமபட்டர் எழுதிய நூல்கள் மூன்றினைக்
குறிப்பிடுக.
4.
அபிராமியின் கடைக்கண்கள் என்னவெல்லாம் தரும்?
5.
புண்ணியம் செய்தனமே மனமே என்று புலவர் பாடக்
காரணம் என்ன?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:10:26(இந்திய நேரம்)