தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொதுவிளக்கம்

noresize frameborder="NO">
CO314 திருக்குறள் காட்டும் வாழ்வியல் - 2

பொது விளக்கம்

இந்தத் தொகுதியில் 6 பாடங்கள் இடம் பெற்றுள்ளன. அவை
அரசாண்மை, அரசர், அமைச்சர், நாடு, கல்வி, வள்ளுவரின்
அறிவியல் தத்துவங்கள் என்பவையாகும்.

குடியாட்சிக் காலத்தில், ஓர் அரசு ஆட்சி முறை எவ்வாறு இருக்க
வேண்டும் என்பதற்குரிய நெறிமுறைகள் அல்லது சட்டங்கள் இன்று
உள்ளன. முடியாட்சிக் காலத்தில் அவ்வாறு இல்லை. முடியாட்சியில்,
அரசனின் விருப்பு வெறுப்பிற்கு ஏற்பவே, அவனது ஆட்சி
அமைந்திருந்தது. அதனால் மக்கள் நன்மையும் அடைந்தனர்,
தீமையும் அடைந்தனர். முடியாட்சிக் காலத்தில் வாழ்ந்தவர்
வள்ளுவர். அரசன் எனும் ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்புகளின்
அடிப்படையில் நாட்டின் ஆட்சி அமைந்திருந்தது. அவற்றை நன்கு
உணர்ந்தவர் வள்ளுவர். எனவே ஒரு நல்ல ஆட்சி முறை -
மக்களுக்கு நன்மை வழங்கும் ஓர் ஆட்சி் முறை எவ்வாறு அமைந்து
இருக்க வேண்டும் என்பதைப் பற்றி வள்ளுவர் சிந்தித்துள்ளார்.
அவரது     சிந்தனைகளைப் பற்றிய விரிவான செய்திகள்
‘அரசாண்மை’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளன.

ஓர் அரசனுக்குத் தேவையான இயல்புகளையும் அவனது ஆட்சிக்குத்
துணையாக அமைய வேண்டியவைகளையும் பற்றி பல கருத்துகளை
வழங்கியுள்ளார். ‘அரசர்’ என்ற தலைப்பில் அக்கருத்துகள்
தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

அரசனுக்குத் துணையாக அமைபவர் அமைச்சர். அவர்
அறிவுடையவராகவும், குற்றங்களைச் சுட்டிக்காட்டுபவராகவும்,
சிற்றினம் சேராமல், சான்றோர்களுக்குத் துணையாகவும் இருக்க
வேண்டும் என்பதனைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள்
‘அமைச்சர்’ என்ற தலைப்பில் விரிவாகக் கூறப்படுகின்றன.

ஒரு நாட்டிற்கு நல்ல அரசனும், அவனுக்குத் துணையான நல்ல
அமைச்சரும் அமைந்திருத்தல் மட்டும் போதாது. குறையாத
விளைபொருளும், நீர் வளமும், அழியாத செல்வமும், தகுதி வாய்ந்த
சான்றோரும், உள்பகை இன்மையும் இருக்க வேண்டும். அத்தகைய
நாடே சிறந்த நாடு என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். அவை
பற்றிய செய்திகள் ‘நாடு‘ என்ற தலைப்பில் கூறப்படுகின்றன.

கல்வியின் சிறப்பினையும் பயனையும் நன்கு அறிந்தவர் வள்ளுவர்.
கல்வியின் சிறப்பினையும் கற்றோரின் பெருமையினையும்,
கல்லாதவர்களின் இழி நிலையையும் பற்றிப் பல உயர்ந்த
கருத்துகளைத் வள்ளுவர் கூறியுள்ளார். அக்கருத்துகளின்
தொகுப்பாகக் ‘கல்வி’ என்ற தலைப்பில் செய்திகள் விளக்கமாகக்
கூறப்பட்டுள்ளன.

அறிவியல் வளர்ச்சியினால் முன்னேறிக் கொண்டிருக்கும்
நூற்றாண்டில் நாம் வாழ்கின்றோம். இன்றைய அறிவியலுக்கும்
பொருந்துகின்ற பல அறிவியல் கருத்துகளை வள்ளுவர்
குறிப்பிட்டுள்ளார். அக்கருத்துகள் தொகுக்கப்பட்டு ‘வள்ளுவரின்
அறிவியல் தத்துவங்கள’் என்ற தலைப்பின் கீழ் விரிவாகக்
கூறப்படுகின்றன.

noresize frameborder="NO">
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)