Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : I
விளக்குக.
படைப்பினங்களுக்குக் காரணமான முகம்மது நபி
மறைந்தபொழுது, நாடு துன்பத்தில் மூழ்குகிறது. வான் இரங்கி அழுதது. வானோர் இரங்கி அழுதனர். சந்திரன்,
சூரியன், நட்சத்திரம் ஆகியவையும் இரங்கி அழுதன.
நெருப்பு இரங்கி அழுதது. காற்று இரங்கி அழுதது. பூமி
கரைந்து இரங்கி அழுதது. பொழுது இரங்கி அழுதது.
உணவுகள் இரங்கி அழுதன. எல்லாமே அழுதன.
உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாமே இரங்கி அழுதன.
இஸ்லாம் தீன் மார்க்கமே அழுதது என இரங்குகிறார்.