தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.5 வஞ்சிப்பாவின் இனம்

4.5 வஞ்சிப்பாவின் இனம்

வஞ்சிப்பா,

வஞ்சித்தாழிசை
வஞ்சித்துறை
வஞ்சிவிருத்தம்

என மூன்று இனங்களைக் கொண்டது.

4.5.1 வஞ்சித்தாழிசை

(1)
குறளடி நான்காய் வரும்.
(2)
ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும்.

4.5.2 வஞ்சித்துறை

குறளடி நான்காய் வரும்.

(எ.கா)

மைசிறந்தன மணிவரை
கைசிறந்தன காந்தளும்
பொய்சிறந்தனர் காதலர்
மெய்சிறந்திலர் விளங்கிழாய்

இது இருசீர் அடி நான்காய் வந்த வஞ்சித்துறை.

4.5.3 வஞ்சிவிருத்தம்

இது சிந்தடி நான்காக வரும்.

சோலை யார்ந்த சுரத்திடைக்
காலை யார்கழ லார்ப்பவும்
மாலை மார்பன் வருமாயின்
நீல வுண்க ணிவள்வாழுமே

இது சிந்தடி நான்காய் வந்த வஞ்சிவிருத்தம்.

வஞ்சிப்பா     பெரும்பாலும் குறளடிகளால் அமைவது.
சிறுபான்மை சிந்தடிகளால் அமையும் வஞ்சிப்பாவும் உண்டு.
மேற்காட்டப் பெற்ற இனங்கள் குறளடியாலும் சிந்தடியாலும்
அமைந்திருப்பதன் காரணமாக இவை வஞ்சிப்பாவின் இனங்களாக
வகுக்கப்பட்டன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:01:25(இந்திய நேரம்)