Primary tabs
அன்பார்ந்த மாணவர்களே! இதற்கு முந்தைய
பாடத்தில்,
சொல்லழகுகளையும், மடக்கு அணியையும் படித்து அறிந்து
கொண்டீர்கள். இப்போது நீங்கள் பாடலில்
இடம்பெறும்
சொற்கள், எழுத்துகள் - ஓவியமாக அமையும்/ அமைக்கப்பெறும்
அதிசயத்தை அறிந்து கொள்ளப் போகிறீர்கள்.
இதுவரை நீங்கள் பாடல்களை இயல்வடிவமாக,
அதாவது
வரிவடிவமாகப் படித்து வந்திருப்பீர்கள். இந்தப்
பாடத்தில்
எடுத்துரைக்கப் பெறும் பாடல்கள் சித்திரமாக (ஓவியமாக)
உங்களது கண்களுக்குத் தெரியப் போகின்றன.
இத்தகைய சிறப்புப் பெற்ற சித்திரக்
கவிகள் குறித்த
அறிமுகத்தை உங்களுக்கு இந்தப் பாடம்
தருகின்றது.
தண்டியலங்காரம் சொல்லணி இயலில் சித்திர கவிகள் குறித்த
செய்திகளைத் தொகுத்துரைக்கிறது. அவற்றை அறிமுக நிலையில்
தருவதாக இப்பாடம் எழுதப் பெற்றுள்ளது.