தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.2 சித்திரகவிகள்

6.2 சித்திரகவிகள்

ஒரு செய்யுளுக்குள், எழுத்துகள் மடங்கி, மடங்கி நின்று
ஓவியமாக அமைவது சித்திரகவி எனப்படுகின்றது.
எடுத்துக்காட்டிற்குப் பின்வரும் பகுதியைக் கவனியுங்கள்.

இப்படத்தில், பாப்பா என்ற சொல் நெடுக்கு வாட்டிலும், குறுக்கு
வாட்டிலும் இருமுறை எழுதப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட
படத்தில் ஆறு இருமுனை அம்புக்குறிகள் சுட்டப் பெற்றுள்ளன.
இவற்றின் வாயிலாக 12 முறை பாப்பா என்ற சொல்லை நீங்கள்
பெற முடியும். இது ஒருவகை வடிவ விளையாட்டு.

இந்த விளையாட்டைச் செய்யுளுக்குள் செய்வது, சித்திரகவி
எனப்படுகிறது.

  • வகைகள்


  • தண்டியலங்கார நூலில்     சித்திரகவிகளின் வகைகள்
    நூற்பாவடிவில் தரப்பெற்றுள்ளன. அந்நூற்பா பின்வருமாறு:
    கோமூத் திரியே, கூட சதுக்கம்,
    மாலை மாற்றே, எழுத்து வருத்தனம்,
    நாக பந்தம், வினாவுத் தரமே,
    காதை கரப்பே, கரந்துறைச் செய்யுள்,
    சக்கரம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம்,
    அக்கரச் சுதகமும் அவற்றின் பால

    (தண்டியலங்காரம்-97)

    என்ற நூற்பா சித்திர கவிகளின் வகைகளைப் பட்டியலிடுகிறது. 12
    வகையான சித்திரகவிகள் இதனுள் கூறப்பெற்றுள்ளன. இவற்றை
    ஒவ்வொன்றாக இனிக் காண்போம்.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:03:21(இந்திய நேரம்)