தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

3.6 தொகுப்புரை


     இச்சோழர் வரலாற்றுப்பாடத்தில் சோழர் மரபு பற்றிய
செய்திகள், பிற்காலச் சோழர் ஆட்சி செய்த காலம், இரு
கிளையினர்ஆட்சி, காலவரிசைப்படி சோழ அரசர்கள், அவர்கள்
நிகழ்த்திய சாதனைகள் ஆகியவை விவரிக்கப்பெற்றுள்ளன.

     சோழர் ஆட்சி முறை எவ்வாறு திகழ்ந்தது, சோழ
மண்டலம், புறமண்டலங்கள் பற்றிய செய்திகள், நாட்டுப்பிரிவுகள்,
அரச உரிமை, பட்டப்பெயர்கள், சமய நிலை, சோழர் இலச்சினை,
அமைச்சர் குழு, உயர்நிலை அலுவலர்கள், கிராம ஆட்சி
முறை, நீதிமன்றங்கள், ஆவணக்களரி , அரசிறையும் பிற
வரிகளும், நிலஅளவு, நீர்ப்பாசன முறை, கல்விச்சாலைகள்,
மருத்துவமனைகள், திருக்கோயில்கள், காசுகள், உருவச்
சிலைகள், இலக்கிய வளர்ச்சி ஆகியவை பற்றியும் இப்பாடத்தில்
கூறப்பெற்றுள்ளன.



தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)

தாய்வழி மரபில் அரசுரிமை பெற்ற மன்னன் யார்?

2)
ஜெயங்கொண்டார் இயற்றிய நூல் யாது?
3)
ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல்கள் யாவை?
4)
பிற்காலச் சோழர்களில் இறுதியாக அரசாண்ட
மன்னன் பெயர்கூறுக.
5)
சோழர்களின் பட்டப் பெயர்களைக் குறிப்பிடுக.
6)
சோழர்களின் இலச்சினை யாது?
7)
தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்னம்பலமாக மாற்றியவர் யார்?
8)
சுரம் இறக்கின பெருமாள் என்ற பெயர் புனைந்து
கொண்டவர் பெயர் கூறுக.
9)
முறையான நில அளவை இந்திய வரலாற்றிலேயே
முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர் யார்?
10)
கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவாலயம் நிறுவிய
மன்னன் பெயர் கூறுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)