Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
5. உலாவில் மங்கைப் பருவ மகளிரின் காதல் நோயைப் புலவர்
எவ்வாறு வருணித்து இருக்கிறார்?
இராசராசன் உலா வருவதைப் அறிந்து அவனைப்
பார்ப்பதற்காகத் தலைவி சென்றாள். ஆனால்
மறுநாள்தான்
தலைவன் வருவான் என்பதை அறிந்து மதி
மயங்கினாள்.
காதல் நோய் அடைந்த அவள் நிலவை
வேண்டாமல்,
சூரியனின் ஒளி தன்மீது படும்படி
விரும்பினாள். பொதிய
மலையிலிருந்து வரும் தென்றலை
வெறுத்தாள். புலிக்கொடி
பறக்கும் பொன்மலையிலிருந்து வரும் வாடைக்காற்றை
விரும்பினாள். தனக்கு எதிராகப்
போர் செய்ய வரும் கடல்
ஒலி அடங்க விரும்பினாள். பாற்கடலை விரும்பினாள்.
இரவு பொழுதை நீளச் செய்யும்
குயிலை விரட்ட
விரும்பினாள். விடியலைக் கூவி அழைக்கும் கோழியை
விரும்பினாள். இவ்வாறு தலைவியின் காதல் நோயைக்
குறிப்பிடுகிறார் புலவர்.