தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

4.
விளிவேற்றுமை அடையும் மாறுதல்களை எழுதுக.

பெயர்ச்சொற்கள் விளிஏற்கும்பொழுது சில மாறுதல்கள் ஏற்படும். அவை ஈறுதிரிதலும் (இறுதி எழுத்து மாறுதல்), ஈறுகுன்றலும் (இறுதி எழுத்து குறைதல்), ஈறு மிகுதலும் (இறுதி எழுத்து வேறு ஒன்று மிகுதல்), இயல்பாக வருதலும் (மாறுதல் இன்றி இருத்தல்) ஈற்று அயல் எழுத்துத் திரிதலும் (இறுதி எழுத்துக்கு முன் எழுத்து மாறுதல்) ஆகும்.

எ.டு

தங்கை
- தங்காய் !
- ஈறுதிரிந்து வந்தது
நண்பன்
- நண்!
- ஈறுகுறைந்தது
மகன்
- மகனே !
- ஈறுமிகுந்தது
தோழி
- தோழி !
- இயல்பாக வந்தது
மக்கள்
- மக்காள்!
- ஈற்றயல் எழுத்துத் திரிந்தது

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:28:04(இந்திய நேரம்)