தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெயரெச்சம் காலம் காட்டுதல்

6.4 பெயரெச்சம் காலம் காட்டுதல்

    வினைப்பகுதி, காலம் காட்டும் இடைநிலை, பெயரெச்சவிகுதி ஆகியவற்றைக் கொண்டதாகப் பெயரெச்சம் அமையும்.‘செய்த‘ என்னும் வாய்பாடு இறந்தகாலம் காட்டும். ‘செய்கின்ற‘என்னும் வாய்பாடு நிகழ்காலம் காட்டும். ‘செய்யும்‘ என்னும்வாய்பாடு எதிர்காலம் காட்டும்.

6.4.1 இறந்தகாலப் பெயரெச்சம்

    த், ட், ற், இன் ஆகிய இடைநிலைகள் கொண்டுஇறந்தகாலப் பெயரெச்சம் அமையும்.

(எ.கா)
த்
- படித்த பாடம்
ட்
- உண் சோறு
ற்
- சென் சாத்தன்
இன்
- போயின போக்கு

6.4.2 நிகழ்காலப் பெயரெச்சம்

    நிகழ்காலப் பெயரெச்சம், கிறு, கின்று, ஆநின்று என்னும்இடைநிலைகளால் காலம் காட்டும்.

(எ.கா)
கிறு
- உண்கிற சாத்தன்
கின்று
- உண்கின்ற சாத்தன்
ஆநின்று
- உண்ணாநின்ற சாத்தன்

6.4.3 எதிர்காலப் பெயரெச்சம்

    எதிர்காலப் பெயரெச்சம், ‘செய்யும்‘ என்னும் வாய்பாட்டில்அமையும். அது, ‘உம்‘ என்னும் விகுதியால் எதிர்காலம்காட்டும்.

(எ.கா)
படிக்கும் சிறுவன்
பாடும் சிறுமி
ரும் வண்டி

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

காலம் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?

2.

இறந்த காலம் காட்டும் இடைநிலைகள் யாவை?

3.

தன்மை ஒருமையில் காலம் காட்டும் வினைமுற்றுவிகுதிகளை எழுதுக.

4.

வினையாலணையும் பெயர் காலம் காட்டுதலைக்குறிப்பிடுக.

5.

நிகழ்காலப் பெயரெச்சம் குறித்து எழுதுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:37:05(இந்திய நேரம்)