Primary tabs
வள்ளுவர்
வாழ்ந்த காலத்தமிழ்ச் சமூகம், அரசியலில் - ஆட்சி
முறையில் எவ்வாறு சிறந்து விளங்கியது என்பதனை
அரசியல்
எனும் இயலில், வள்ளுவர் கூறும் கருத்துக்கள் மூலம் தெரிந்து
கொள்ளலாம்.
சிறந்த
நாகரிகமும் பண்பாடும் நிறைந்த ஒரு சமூகத்தில்தான்,
இத்தகைய நெறிமுறைகளை உடைய அரசனும், ஆட்சி முறையும்
அமைந்திருக்கும்.
அரசியல்
என்ற தலைப்பில், அரசனுக்கு உரிய ஆறு பகுதிகளாகக்
கூறும் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்
ஆகியவை
இன்றைய அரசியலாளருக்கும், ஆட்சிமுறைக்கும் கூட பொருந்தும்.
வள்ளுவரின்
அரசியல் சிந்தனைகள், அறிவு முதிர்ச்சி பெற்ற ஒரு
தமிழ்ச் சமுதாயத்தின் வெளிப்பாடு எனலாம்.