Primary tabs
4.0 பாட முன்னுரை
அன்பு
நிறை மாணவர்களே! நீங்கள்
இப்பாடத்தில்
நல்லியக்கோடனின் தலைமைச் சிறப்பு, பாணர்களின் வறுமை, பரிசில்
பெற்ற பின்பு அவர்களது செல்வ நிலை, கிடங்கிலுக்குச் செல்லும்
வழியில் அமைந்துள்ள எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் ஆகிய
இடங்களில் பாணனுக்கு
வழங்கப்படும் விருந்துகள்
முதலிய
செய்திகளைப் படிக்க
இருக்கின்றீர்கள். இச்செய்திகள்
சிறுபாணாற்றுப்படையில்
114 முதல் 202 வரை உள்ள அடிகளில்
அமைந்துள்ளன.