Primary tabs
4.1 நல்லியக்கோடனின் தலைமை
கடையெழு
வள்ளல்களின் வள்ளல் தன்மையைக் காட்டிலும் மிக்க
வள்ளல்
தன்மை கொண்டவன் ஓய்மா நாட்டை ஆண்ட குறுநில
மன்னன்
நல்லியக்கோடன். இதனை
முந்தைய பாடத்தில்
படித்தீர்கள்.
இம்மன்னன்
வலிமை பொருந்திய ஓவியர் குடியில் பிறந்தவன்.
இவன் முன்னோர்களான ஓய்மான் நல்லியாதன், ஓய்மான்
வில்லியாதன் ஆகிய இருவரும் வள்ளல்களாகத் திகழ்ந்தனர்.
நல்லியக்கோடன்
பெருமாவிலங்கைத் தலைவன் என்று
சிறப்பித்துக் கூறப்படுகிறான். இவன் ஆட்சிக்கு
உட்பட்ட ஊர்களாக
மாவிலங்கை, எயில்பட்டினம், வேலூர்,
ஆமூர் ஆகியவை
கூறப்பட்டுள்ளன. ஆயினும், பெருமாவிலங்கைத்
தலைவன் என்றே
பெரிதும் சிறப்பித்துக் கூறப்படுகிறான். எனவே, மாவிலங்கை
இவனது தலைநகரம் என்று கருதலாம்.
இதற்குக் கிடங்கில் என்று
சொல்லவும் பெறும்.
இந்த
மாவிலங்கை வளம் மிக்க நாடு. இவ்வூரில் பெருக்கெடுத்து
ஓடுகின்ற நீரின்கண் மகளிர் விளையாடி
மகிழ்வர். இப்பெண்கள்
நீரில் நீந்தி விளையாடுவதற்குத் தெப்பக்கட்டைகளாக அகில்,
சந்தனம், சுரபுன்னை ஆகிய மரக்கட்டைகளைப் பயன்படுத்துவர்
(தெப்பக் கட்டை = நீரில் மிதக்கும்
கட்டை). இப்பெண்களுக்கு இம்
மரக்கட்டைகளை ஓடி வருகின்ற நீரோட்டமே கொண்டு வந்து
சேர்க்கும்.
நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்
துறையாடு மகளிர்க்குத் தோள்புணை ஆகிய
பொருபுனல் தரூஉம்
இத்தகு
வளமும் பெருமையும் புகழும் கொண்ட நாடு மாவிலங்கை
(பெரிய
இலங்கை). இதனை ஆட்சி செய்த பல மன்னர்களுள் இவன்
தலைசிறந்தவன் ஆவான்.
இங்குக்
கூறப்படும் இலங்கை வேறு; இராவணன்
ஆண்ட
இலங்கை வேறு. இலங்கை என்னும் பெயர்
கொண்ட ஊர்கள்
தமிழகத்தில் பல இருந்தன.
நல்லியக்கோடன் வீரத்திலும் கொடையிலும் சிறந்தவன்.
வீரம்
நல்லியக்கோடன்
வீரம்
மிக்கவன். பகைவரை மார்பிலும்
முகத்திலும் வெட்டி வெற்றி
கொள்ளும் வீரம் நிறைந்தவன். புலி
போன்ற வலிமை உடையவன்.
இதனை ‘வடுவில் வாய்வாள்’,
‘உறுபுலித் துப்பின்’ என்னும் சொற்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கொடை
இவன் மழை மேகம் போன்று பலனை எதிர்பார்க்காது வாரி
வழங்கும் கொடைத் திறம் மிக்கவன். இதனை, ‘பிடிக்கணம் சிதறும்
பெயல்மழைத் தடக்கை’ என்ற
அடி சுட்டுகின்றது.
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்
உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்
. . . . . . . . . . . . . . . . . .
பிடிக்கணம் சிதறும் பெயன்மழைத் தடக்கைப்
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை
நல்லியக் கோடன்....
(அடிகள் 121-126)