Primary tabs
தமிழ் இலக்கியம் பயிலும்
மாணவர்களுக்குப் புதிய
எழுச்சியை உண்டாக்கிய பெருமை மு.வ. வின் படைப்புகளுக்கு
உண்டு. அத்தகைய பெருமை நிறைந்த படைப்புகள் உருவாகிட
ஏதுவாக இருந்த அவரது வாழ்வையும், அவர்
ஆற்றிய
பணிகளையும் அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்
அல்லவா?
தமிழ்நாட்டில் வடஆர்க்காடு மாவட்டத்தில் திருப்பத்தூரில்
25.04.1912 ஆம் நாள் பிறந்தவர் மு.வ., இவரது பெற்றோர்
மு. வரதராசன்
கண்ணம்மாள் ஆவர். வடஆர்க்காடு
மாவட்டத்தில் இருக்கும் வேலத்திலும்
வாலாசாவிலும் தொடக்கக் கல்வியைக் கற்றார்.
திரு. முருகைய முதலியாரிடம் தமிழ் கற்றுப்
புலவர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி
மு.வ. 1935 இல்
ராதா அம்மையாரை மணந்து
இல்வாழ்க்கையைத் தொடங்கினார். இவருக்கு
மூன்று
ஆண்மக்கள் பிறந்தனர். அவர்கள் முறையே திருநாவுக்கரசு,
நம்பி, பாரி ஆகியோர் ஆவர். மு.வ. தம் மக்களுக்கு இட்டு
வழங்கியிருக்கும் பெயர்கள் தூய தமிழ்ப் பெயர்கள் என்பதை
அறியும் மாணவர்களே, உங்களுக்கும் உங்கள் வாழ்க்கையில்
இதனைப் பின்பற்ற வேண்டும்
என்ற எண்ணம்
எழுகின்றதல்லவா? பல்வேறு பதவிகளில்
அமர்ந்து
பணியாற்றிய மு.வ. 1974 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
மு.வ. மிக இளமையிலேயே அரசுப் பணியில்
சேர்ந்து
தமது வாழ்க்கையைத் தொடங்கிவிட்டார். 1928 இல் முதன்
முதலில் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தாளராகப்
பணியில் சேர்ந்தார். 1935 இல் தமிழ்ப் புலவர்
தேர்வில்
சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி
பெற்றார். இதனால் 1935 ஆம் ஆண்டில் நகராட்சிப்
பள்ளியொன்றில் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
1939 இல் பி.ஓ.எல் பட்டம் பெற்றதன் விளைவாகச் சென்னை,
பச்சையப்பன் கல்லூரியில்
விரிவுரையாளராகப் பணி
மேற்கொண்டார். 1945 இல் அக் கல்லூரியில் தமிழ்த் துறைத்
தலைவராகப் பொறுப்பு ஏற்றார். பின்னர் 1961 முதல் 1971
வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்
துறைத்
தலைவராகப் பணிபுரிந்தார். 1971 முதல் 1974 வரை மதுரைப்
பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்றார்;
புகழ் மிகுந்த துணை வேந்தர் என்ற பெருமை பெற்றார்.
அரசு
அலுவலகம் ஒன்றில் எழுத்தராக வாழ்க்கையைத்
தொடங்கிய மு.வ., கல்வியாளர் அனைவரும்
அடைய
விரும்பும் பல்கலைக் கழகத் துணைவேந்தர்
பதவியை
எட்டியுள்ளார். இதனைப் படிக்கும் மாணவர்களே, உள்ளத்தில்
உறுதியும் உழைப்பதற்கு ஊக்கமும் இருக்கும் என்றால் நம்மால்
எதையும் எட்டமுடியும் என்பது புரிகிறதல்லவா?
இதுவே
மு.வ.வின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும்
நல்லதொரு
வழிகாட்டு நெறியாகும்.