Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(2)
இலக்கியக் கூறுகள் இரண்டிற்கு எடுத்துக் காட்டுத் தருக.
(1) உவமை, (2) உருவகம்
(1) உவமைக்கு எடுத்துக்காட்டு
“மனித தெய்வமான நேருவைக் காணத் தணலிடை
அகப்பட்ட புழுவைப் போலவும், தரையிடை வீசப்பட்ட
மீனைப் போலவும், துடியாய்த் துடித்துக்
கொண்டிருந்தார்.”
(2) உருவகத்திற்கு எடுத்துக்காட்டு
“நான் கலைந்த கோலம். முற்றுப் பெறாத கவிதை.
அதனை மீண்டும் பளிச்சிடச்
செய்ய நீங்கள்
விரும்புகிறிர்களா? இலக்கணச் சுத்தமில்லாத என் காதல்
கதை, தட்டெழுத்துப் படிகளின் எட்டாவது கார்பன்
காபி” என்னும் உருவகம், புரியாத காதலை, மயக்கத்தில்
இருக்கும் ஒருவருக்கு மற்றவர் எடுத்துரைப்பது எவ்வளவு
கடினம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.