தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3)
அற்புதத்திருவந்தாதியிலிருந்து உவமை நயத்துக்கு ஓர்
எடுத்துக் காட்டுத் தருக.
    இயற்கையை உடலாகக் கொண்டவன் சிவன். ஒரு
நாளின் பொழுதுகளையே உவமையாக்கி, சிவபெருமானை
வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்.

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு
வீங்கிருளே போலும் மிடறு
- (65)

    வேளைக்கு வேளை இயற்கை அடையும் நிறங்கள்
சிவபெருமான் திருமேனியில் திகழ்தலைச் சுட்டிக் காட்டுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:59:23(இந்திய நேரம்)