தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

4.

மொழிபெயர்ப்பு, இயக்கங்களுக்குத் துணைபுரிந்தது
பற்றிக் கூறுக.

    1940-களில் பார்ப்பனீய எதிர்ப்பு, வருணாசிரம
எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு, விதவை மறுமணம்,
சமய மறுப்பு போன்ற சீர்திருத்தக் கருத்துகள் திராவிட
இயக்கத்தினரால் முன்னிலைப் படுத்தப் பட்டன.

    பண்பாட்டு நிலையில் மாற்றங்களைக் கோருவதன்
மூலம்     ஏற்கெனவே நிலவி வந்த நிலமானிய
மதிப்பீடுகளைக்     கேள்விக்குள்ளாக்கினர்.     திராவிட
இயக்கத்தைச் சார்ந்த இதழ்கள், புத்தகங்கள், மேடைப்
பேச்சுகள் மூலம் சமூகச் சீர்த்திருத்தக் கருத்துகளைப்
பரப்பினர். அப்பொழுது பெருமளவில் பிரெஞ்சு
சிந்தனையாளர்களின்     கருத்துகளையும், இலக்கியப்
படைப்புகளையும் தமிழாக்கிப் பயன்படுத்தினர். திராவிட
இயக்கத்தாரின் கருத்தியல் பிரச்சாரத்திற்குப் பிரெஞ்சு
மொழி நூல்கள் அடிப்படையாக விளங்கின. மாறிவரும்
புதிய போக்குகளை வெளிப்படுத்த, பிரெஞ்சு நூல்கள்
அவர்களுக்குப் பயன்பட்டன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:47:16(இந்திய நேரம்)